Ticker

6/recent/ticker-posts

காதலியைச் சிமென்ட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்


தென்கொரியாவில் ஆடவர் ஒருவர் தம்முடைய காதலியைக் கொலை செய்து சடலத்தைச் சிமென்ட்டில் (cement) புதைத்து வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்தப் பெண்மணி காணவில்லை என்று 16 ஆண்டுகளுக்கு முன் புகார் செய்யப்பட்டது.

குற்றம் புரிந்த ஆடவருக்கு இப்போது 50 வயது மேல் ஆகிறது.

தம்முடைய காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஒரு பொருளால் அவரை அடித்ததாக ஆடவர் கூறினார்.

பிறகு அவர் பெண்ணின் சடலத்தைப் பெட்டியில் வைத்ததாக BBC குறிப்பிட்டது.

தம்முடைய வீட்டுப் பால்கணியில் செங்கல், சிமெண்ட் ஆகியவற்றுக்குக் கீழ் அந்தப் பெட்டியை ஆடவர் புதைத்தார்.

சென்ற மாதம் வரை அந்தப் பெட்டியை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஊழியர் ஒருவர் வேலை செய்ய வந்தபோது அவர் அந்தப் பெட்டியைக் கண்டார்.

காணாமற்போன பெண்ணும் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலமும் ஒன்றுதான் என்று கைவிரல் ரேகை மூலம் உறுதிசெய்யப்பட்டது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அந்த ஆடவர் அந்த வீட்டில் வசிக்கவில்லை.

இருந்தாலும் காவல்துறை அந்த ஆடவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்தது.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments