நோயாளியை பார்க்க வந்த டாக்டரை வெளுத்து வாங்கிய உறவினர்கள்... என்ன நடந்தது தெரியுமா?

நோயாளியை பார்க்க வந்த டாக்டரை வெளுத்து வாங்கிய உறவினர்கள்... என்ன நடந்தது தெரியுமா?


குஜராத் மாநிலம், பவ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழையும் முன் செருப்பைக் கழற்றச் சொன்ன மருத்துவரை நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய சம்பவம், அந்த அறையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன் ஜெய்தீப்சிங் கோஹில் என்ற மருத்துவர், அவசர சிகிச்சை பிரிவுக்குள் தலையில் பலத்த காயம் அடைந்த ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அந்த பெண்ணை காண்பதற்கு அவரது உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடியே நோயாளிகள் அறைக்குள் வந்துள்ளனர். அப்போது அறையில் இருந்த மருத்துவர் ஜெய்தீப் சின்ஹ கோகில், அவர்களிடம் செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டார். இதில், உறவினர்களுக்கும், மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனைக்கண்ட செவிலியர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வந்த பெண் என அனைவரும் சேர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். தாக்குதலின்போது மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் தரையில் சிதறிக் கிடந்ததால், அவசர சிகிச்சைப் பிரிவு சீர்குலைந்து காணப்பட்டது. தாக்குதல் நடந்த உடனேயே போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது 1115(2) (காயத்தை ஏற்படுத்தும் நோக்கம்), 352 (அமைதியை கெடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவமதிப்பு), 351(3) (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNS) பிற தொடர்புடைய விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.


news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post