Ticker

6/recent/ticker-posts

உடல் பருமனை குறைக்க டயட்டில் இருக்கும் பூனை? ரஷ்யாவில் ருசிகர சம்பவம்!


தற்போது பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இதனால் டயட், உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பூனை ஒன்று உடல் எடை அதிகரித்து சிகிச்சையில் இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவில் க்ரோஷிக் என்ற பூனை 17 கிலோ எடையை கொண்டுள்ளது.

தற்போது இந்த பூனையால் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதால் டயட் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் சுமார் 4-5 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த க்ரோஷிக் பூனை 17 கிலோ வரை எடை உள்ளது. இது தின்பண்டங்களை விரும்பி உண்பதற்கு பெயர் பெற்ற பூனையாகும். இதனால் சிறுவயதிலேயே உடல் எடை அதிகரித்து காணப்பட்டுள்ளது.

இந்த பூனை தற்போது டயட்டில் உள்ளது. Matroskin என்ற தங்குமிடத்தில் மறுவாழ்விற்காக அட்மிட் செய்யப்பட்டுள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில் உள்ள ஒரு மருத்துவமனையின் அடித்தளத்தில் இந்த பூனை தங்க வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதில், க்ரோஷிக்கை அதன் முன்னாள் உரிமையாளர் நன்கு கவனித்துள்ளார். பூனை தொடர்ந்து ரொட்டி, சூப், விஸ்கி மற்றும் இறைச்சி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளது. இதனால் உடல் எடை வெகுவாக அதிகரித்த நிலையில், எழுந்து கூட நடக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. நாளடைவில் அதனால் அசைய கூட முடியவில்லை.

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் மேட்ரோஸ்கின் தங்குமிடத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் க்ரோஷிக்கிற்கு அல்ட்ராசவுண்ட் செய்ய அழைத்து சென்றனர். ஆனால் பூனைக்கு ஸ்கேன் செய்ய முடியவில்லை, ஏனெனில் சென்சார் கொழுப்பு அடுக்குகளைக் கடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பூனையின் உடல் எடை அதிகரித்திருந்தது.

இந்த சம்பவத்தை விளக்கிய மருத்துவர்கள், இது “மிகவும் அரிதான நிகழ்வு” என்று கூடினர். மேலும் பூனையின் உரிமையாளர் பூனையை மிகவும் நேசித்ததால், பூனை நகர முடியாத அளவிற்கு உணவுகளை அளித்து வந்துள்ளார் என தகவல் அளித்துள்ளனர்.

தற்போது உலகின் முதல் 5 கொழுத்த பூனைகளில் இந்த க்ரோஷிக் பூனையும் ஒன்றாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த பூனை மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் எழுந்து நடக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் மீண்டும் ஆரோக்கியமாக இருக்க பூனை ஒவ்வொரு வாரமும் 70-150 கிராம் வரை எடையை குறைக்க வேண்டும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர் . இப்போது ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் பூனை மெதுவாகத் திரும்பி வந்து மீண்டும் நடக்கக் கற்றுக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள மருத்துவமனை ஊழியர்கள், க்ரோஷிக் வாட்டர் டிரெட்மில்லில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் இணைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments