கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என்ற செய்தியை பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்தால் நாம் அறிந்தோம் என்ற செய்தியை, நாம் முன்னரே குறிப்பிட்டோம்.
இலங்கை மன்னன் கயவாகுவும், சேரன் செங்குட்டுவனும் ஒரு காலத்தால் வாழ்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்ததால், கயவாகுவின் காலமான கி.பி.113-ஆம் ஆண்டு முதல் கி.பி.125 ஆம் ஆண்டின் சராசரிக் காலமாக கி.பி.119 ஆண்டாக நாம் எடுத்துக்கொண்டு, இதிலிருந்து ஐம்பத்தைந்து ஆண்டைக் கழித்தால், சேரன் செங்குட்டுவன் கி.பி.64 ஆண்டில் அரியணை ஏறினான் என்று கொள்ளல் வேண்டும்.
சேரன் செங்குட்டுவனின் தந்தை சேரன்' இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்' ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசோச்சினான் என்ற செய்தி, 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீற்றிருந்தான்' என பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தால் நாம் அறிகின்றோம். இந்த இரண்டாம் பதிற்றுப் பத்து 'குமட்டூர்க் கண்ணனா'ரால் அருளிச் செய்யப் பெற்றது. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று நாம் அறிந்ததால்.
செங்குட்டுவன் அரியணை ஏறிய காலமான கி.பி.64-ஆம் நூற்றாண்டில் இருந்து கழித்தால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி.6-ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்று உணரல் வேண்டும்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு முற்பட்டவரான "சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை' பதினேழாண்டு காலம் ஆட்சி செய்தான் என்ற செய்தியையும் இப்பதிற்றுப் பத்தே நமக்குக் காட்டுகிறது. பதிற்றுப்பத்தில் 'அரிசில் கிழார்' அருளிச்செய்த எட்டாம் பத்தில் 'தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்' என்று குறிப்பிட்டதிலிருந்து பெருஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக் குறிப்பிட்டதிலிருந்து பெருஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக்காலம் நமக்கு புலனாகிறது.
எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 6-ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்று நாம் உணர்ந்தமையால், இதளின்றும் பதினேழு ஆண்டு கழிப்பவே, பெருஞ்சேரலிரும்பொறை, கிறித்து பிறப்பதற்கு முன் 11-ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்று உணரப்படும்.
சேரன் பெருஞ்சேரலிரும்பொறையின் தந்தையான சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்' என்ற அரசன், இருபத்தைந்தாண்டுகள் அரசோச்சினான் என்ற செய்தியை 'செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான்' என கபிலரால் அருளிச்செய்த, பதிற்றுப் பத்தின் ஏழாம் பத்தின் வாயிலாக நாம் உணருகிறோம்.
எனவே இவனது அரசாட்சிக் காலமான இருபத்தைந் தாண்டுக்காலத்தை, பெருஞ்சேரலிரும் பொறையின் காலமான கி.பி.11 ஆம் ஆண்டினுடன் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கி.மு.36-ஆம் ஆண்டில் அரசு கட்டில் ஏறினான் என்பது புலனாகிறது.
இவருக்கு முற்பட்ட 'சேரமான் பெருஞ்சேரலாதன்", சோழ மன்னன் கரிகாற் பெருவளத்தாளொடு போரிட்டு, தோற்று, நாணி, வடக்கிருந்து உயிர் நீத்தான். எனவே சோழன் கரிகாற் பெருவளத்தான் கி.மு. முதல் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்திருத்தல் புலனாகிறது. ஆனால் கனகசபைப் பிள்ளை என்ற ஆய்வாளர், கரிகாற் பெருவளத்தான், தன் மகள் சோனையை, சேரன் பெருஞ்சேரலாதனுக்கு, மணமுடித்தான் என தாம் எழுதிய 'பதினெண் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழர்' எனும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments