Ticker

6/recent/ticker-posts

அப்பாடா 1338 நாட்கள்.. பாகிஸ்தான் நிம்மதி.. 3 வலையை விரித்து இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது எப்படி?

இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் அடித்தும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.

அது போக சமீபத்தில் வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்ததால் கடுப்பான பாகிஸ்தான் வாரியம் பாபர் அசாம், நாசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி ஆகிய 3 முக்கிய நேரடியாக கழற்றி விட்டது. அந்த சூழ்நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி முல்தானில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 366 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாபர் அசாமுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற கம்ரான் குலாம் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து 118 ரன்கள் குவித்தார்.

அவருடன் சாய்ம் ஆயுப் 77 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 291 ரன்களுக்கு சுருட்டியது. இங்கிலாந்துக்கு ஜோ ரூட் 34, ஓலி போப் 29, ஜாக் கிராவ்லி 27, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1, ஹரி ப்ரூ 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 114 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சஜித் கான் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் 75 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் போராடி 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆகா சல்மான் 63 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 297 ரன்களை துரத்திய இங்கிலாந்து மீண்டும் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. இங்கிலாந்துக்கு ஜோ ரூட் 18, பென் டக்கெட் 0, ப்ரூக் 16 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு ஸ்பின்னர்கள் நோமன் அலி 8, சஜித் கான் 2 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் கதையை முடித்தனர்.

அதனால் 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதை விட 1338 நாட்கள் கழித்து 11 தொடர் ட்ரா/தோல்விகளுக்கு பின் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று பாகிஸ்தான் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

குறிப்பாக பாபர் அசாம் வீரர்களை கழற்றி விட்ட பாகிஸ்தான் கம்ரான் குலாமை சேர்த்தது வெற்றிக்கு முதல் படியானது. மேலும் முதல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச் இப்போட்டியில் பயன்படுத்தப்பட்டதால் அது தார் ரோட்டிலிருந்து சுழலுக்கு சாதகமாக மாறியது. அதில் அசத்துவதற்காக பாகிஸ்தான் 3 ஸ்பின்னர்களுடன் விளையாடி வெற்றி கண்டது.

crictamil



 



Post a Comment

0 Comments