அரசின் அதிரடி மாற்றங்கள்-15

அரசின் அதிரடி மாற்றங்கள்-15


இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீயை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி அலுவலகத்தில் 2024. 10.09  அன்று முற்பகல் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீயை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது அவர்  புதிய ஆட்சிக்கு  வாழ்த்து தெரிவித்ததுடன், தென்கொரிய அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியையும் கையளித்தார்.

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென் கொரியாவின் அர்ப்பணிப்பை அவர்   உறுதிப்படுத்தியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்தும்  நினைவுகூரப்பட்டன.

இலங்கைக்கு அந்நியச் செலாவணி அனுப்புவதில் தென் கொரியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டுக்கு பணம் அனுப்பும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், கொரிய சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு  ஈர்ப்புள்ள நாடாக இலங்கையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் உறுதியளித்த அவர், தென்கொரியாவும் கடந்த காலங்களில் இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், கொரியா பெற்ற அனுபவத்தை இலங்கையும் பயன்படுத்தி வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். கொரியா எக்ஸிம் வங்கியின் முதலீட்டை அபிவிருத்தியின் முக்கிய அங்கமாகக் கருதி இலங்கையின் கிராமப்புற வறுமையை ஒழிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சுகாதாரப் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கொரியாவின் ஆதரவை உறுதி செய்த அவர், தென் கொரியாவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களை சிறந்த முறையில் தயார்படுத்தும் வகையில், கொரிய மொழியை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கு தென் கொரியாவின் விருப்பத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஜேர்மன் தூதுவர் ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனும் 9ம் திகதி முற்பகல் ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்த ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன், ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கொல்ஸின் (Olaf Scholz) வாழ்த்துச் செய்தியையும்  வழங்கிவைத்தார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நிரந்தர பங்காளியாக ஜேர்மனி உறுதி பூண்டுள்ளதாக இந்த சந்திப்பில் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை மேலும் பேணுவதற்கு ஜேர்மனி கொண்டுள்ள அக்கறையை தூதுவர் நியூமன் வலியுறுத்தினார்.

மனித வள அபிவிருத்தியில் ஜேர்மனியின் 70 வருட அனுபவத்தை வலியுறுத்திய தூதுவர், இலங்கையில் மனித வள அபிவிருத்தியை வலுப்படுத்த தனது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேலும், இலங்கையின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முக்கிய பங்காற்றுகின்ற கட்டுபெத்த மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரிகளின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜேர்மன் உதவி வழங்கப்படுமெனவும் தூதுவர் குறிப்பிட்டார். இலங்கையில் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்க ஜேர்மனி ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் ஏற்றுமதித் திறனுக்கு அமைவாக இலங்கைக்கு சிறந்த வாய்ப்பை வழங்கக் கூடிய  இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதிநிதித்துவப்படுத்த ஆர்வம் காட்டுமாறு கூறினார்.

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதியை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09)  இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகையை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது புதிய ஆட்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த உதைக்வே ஆண்டகை, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ்  அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும்  கையளித்தார். 

இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய அவர், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பான எமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான அனுபவமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த  உதைக்வே ஆண்டகை, அது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான எமது முயற்சியையும்  பாராட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதற்காக எமது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வத்திக்கானின் முழு ஆதரவையும் வழங்குவதாக உதைக்வே ஆண்டகை உறுதியளித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இருதரப்பிற்குமிடையில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.
CLICK 👇👇👇
அரசின் அதிரடி மாற்றங்கள்-1
அரசின் அதிரடி மாற்றங்கள்-2
அரசின் அதிரடி மாற்றங்கள்-3
அரசின் அதிரடி மாற்றங்கள்-4
அரசின் அதிரடி மாற்றங்கள்-5




 



Post a Comment

Previous Post Next Post