
குறள் 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
பழி பாவத்துக்கு பயப்படுத பெரியவங்க, தினை அளவுல ஒரு தப்பை செஞ்சுட்டாலும், அதை பனை மர அளவுக்கு பெருசா நெனைச்சுக்குவாங்க.
குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
தப்புத் தண்டா செய்யுறது, அழிவை உண்டாக்கக் கூடிய பகையா மாறிடும். அதுனால தப்புத் தண்டா செய்யாம இருந்துக்கணும்.
குறள் 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
மொதல்ல தாங்கிட்ட இருக்க குத்தம் கொறைகளை அழிக்கணும். அதுக்குப் பொறவு அடுத்த ஆளுங்க குத்தங்கொறையை ஆராய்ஞ்சு பாத்துச் சொல்லுத தலைவர்களுக்கு ஒரு குத்தமும் இருக்காது.
குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
செய்ய வேண்டிய நல்லது எதையும் செய்யாம சும்ம சேத்துச் சேத்து வைய்க்க பணம் காசுல்லாம் ஒரு பயனும் இல்லாம பாழாப் போயிரும்.
குறள் 438
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பணம் சேக்கிறதுல குறியா இருந்து, சேத்த பணத்தை யாருக்கும் கொடுக்காம வாழ்றது இருக்கே அது தான் எல்லாத்திலியும் கொடுமையான குத்தம்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments