Ticker

6/recent/ticker-posts

Ad Code



வங்கியில் கூட்டத்தை நினைத்து டென்ஷன் வேண்டாம்: வங்கிகளில் பணியமர்த்தப்படும் சிட்டி ரோபோகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களது வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் முன்பாக காத்திருக்கும் நேரத்தை குறைக்க புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். 

அதன்படி அடுத்த தலைமுறையைினரை கவரும் வகையில் எங்களது குறிப்பிட்ட வங்கிகளில் ரோபோகளை பணியமர்த்த முடிவு செய்துள்ளோம். அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எங்களது குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இதனை முன்னெடுக்க உள்ளோம். 

முதல் கட்டமாக வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குல், கணக்கு தொடங்குதல், வங்கியில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் ரோபோகள் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் லாக்கர்களை பராமரிக்கும் பணியிலும், அடுத்தடுத்த வங்கி பணிகளிலும் ரோபோகள் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக முத்ரா கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பணிகளிலும் ரோபோகள் ஈடுபடுத்தப்படும். மாநிலங்களின் தலைமை அலுவலகங்களில் ரோபோகள் பயன்படுத்தப்பட உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் எங்கள் வங்கிகளில் 50 ரோபோகளை ஈடுபடுத்த ஆலோசித்துள்ளோம். கடந்த 18 மாதங்களில் 42 லட்சம் வாடிக்கையாளர்களை புதிததாக பெற்றுள்ளோம். 

கடந்த ஜூன் 30ம் தேதி வெளியான தரவுகளின் படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 3,250 கிளைகளுடன் 41 மில்லியன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

asianetnews



 



Post a Comment

0 Comments