162 ரன்ஸ் சேசிங்.. பலித்த ஜெயசூர்யா மேஜிக்.. காட்டடி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இலங்கை வரலாற்று சாதனை வெற்றி

162 ரன்ஸ் சேசிங்.. பலித்த ஜெயசூர்யா மேஜிக்.. காட்டடி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இலங்கை வரலாற்று சாதனை வெற்றி


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் காட்டுத்தனமாக விளையாடக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இலங்கை பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி தம்புலாவில் நடைபெற்றது. அப்போட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 162-8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு எவின் லெவிஸ் 0, ராஸ்டன் சேஸ் 8, சாய் ஹோப் 18, ரூதர்போர்ட் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக பிரண்டன் கிங் 23, கேப்டன் போவல் 37, குடகேஷ் மோட்டி 18 ரன்கள் எடுத்தனர். இலங்கைக்கு அதிகபட்சமாக ஹசரங்கா, தீக்சனா ஆகிய ஸ்பின்னர்கள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கை அணிக்கு நிசாங்கா – குசால் மெண்டிஸ் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்கள். அந்த வகையில் 5.2 ஓவரில் 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்து அந்த ஜோடியில் நிசாங்கா 39 (22) ரன்களில் மோட்டி சுழலில் போல்டானார். ஆனால் அடுத்து வந்த குசால் பெரேரா தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து ஆடிய குஷால் மெண்டிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அசத்திய குசால் பெரேரா அரை சதமடித்து 2வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாத இந்த ஜோடியில் குஷால் மெண்டிஸ் 68* (50), குசால் பெரேரா 55* (36) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்கள். 

அதனால் 18 ஓவரிலேயே 166-1 ரன்கள் எடுத்த இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2 – 1 (3) என்ற கணக்கில் காட்டடி வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்றது. சொல்லப்போனால் இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக ஒரு இருதரப்பு தொடரை வென்று இலங்கை வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஜெயசூர்யா தலைமையில் இந்தியா, நியூசிலாந்தை தோற்கடித்த இலங்கை வெற்றிப் பாதைக்கு திரும்பியது. தற்போது அவருடைய மேஜிக் பயிற்சியில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post