
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) கடந்த 2024.10.10 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி தொடர்பில் உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியையும் கையளித்தார்.
இங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலைமைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பங்களாதேஷில் இலங்கையின் முதலீடு மற்றும் அங்கு பணிபுரியும் பெருமளவான இலங்கை பணியாளர்கள் குறித்தும் விசேடமாக கலந்துரைடப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் தற்போதுள்ள முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA) வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இந்த கலந்துரையாடலில் உறுதியளிக்கப்பட்டது
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஞானசார தேரருக்கு பிடியாணை உத்தரவு:
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி குறித்த உத்தரவை 2024.10.09 அன்று பிறப்பித்தார்.
2014ம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் இஸ்லாமியர்களின் குர் ஆனை அவமதித்தமைக்காக ஞானசார தேரர் மீது வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அவர் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு நிறைவு:
2024.10.11ம் திகதி நண்பகல் 12 மணியுடன், நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்தபோது, இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின. 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்:
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் 4 முஸ்லிம்களும், 4 தமிழர்களும் உட்பட பல முன்னாள் எம்.பி.க்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
01. ரஞ்சித் மத்தும பண்டார
02. இம்தியாஸ் பாக்கீர் மார்கார்
03. டலஸ் அழகப்பெரும
04. சாகரன் விஜயேந்திரன்
05. நிசாம் காரியப்பர்
06. சுஜீவ சேனசிங்க
07. ஜீ.எல்.பீரிஸ்
08. சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே
09. உபுல் ஜயசூரிய
10. மஹீம் மெண்டிஸ்
11. உபுல் பண்டார திஸாநாயக்க
12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
13. லிஹினி பெர்னாண்டோ
14. ரவீந்திர சமரவீர
15. அதுலசிறி சமரகோன்
16. கென்னடி குணவர்தன
17. லலித் பிரசன்ன பெரேரா
18. விசாகா சூரியபண்டார
19. மகேஷ் சேனாநாயக்க
20. ரவி ஜயவர்தன
21 டி.டி.பி. விஜேகுணவர்தன
22. எல். மித்ரபாலா
23. பழனிவேலு பரமேஸ்வரன்
24. பாலகிஷ்ணன் சிவநேசன்
25. ஜி. நகுலேஸ்வரன்
26. சந்திம விஜேகுணவர்தன
27. எம். எச்.எம். ரூமி
28. எம்.ஐ.எம். முஹம்மது
29. இந்திக்க பண்டாரநாயக்க
துருக்கி குடியரசின் தூதுவர்
ஜனாதிபதி அலுவலகத்தில் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட்டை(Semih Lütfü Turgut)ஜனாதிபதியை கடந்த 2024.10,10ம் திகதி சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த தூதுவர், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் துருக்கி மக்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
துருக்கி-இலங்கை உறவுகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் துருக்கிக்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், துருக்கியில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் தூதுவர் உடன்பாடு தெரிவித்தார்.
துருக்கி-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் அடையாளமாக துருக்கிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்துகொள்ளுமாறு துருக்கித் தூதுவர், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படும் பிம்பங்கள்:
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக, பல வருடங்களாக அரசியல் செய்து, நாட்டை ஆட்டங்காண வைத்த பலர், அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
அரகலய அல்லது system Change தொடரின் ஒரு அங்கமாகவே இது கருதப்படுகின்றது.
ஓரங்கட்டப்பட்டவர்களுள் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி, ரணில் ஆகியோர் அடங்கியிருப்பது ஒரு விஷேட அம்சமாகும்.
பாட்டலி சம்பிக்கவும் விமல் வீரவங்சவும் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
அத்தோடு மாவை சேனாதிராஜாவும் C.V. விக்னேஸ்வரனும் தாமாகவே ஒதுங்கி விட்டார்கள்.
அலி சப்றி, டலஸ், ஷெஹான், நாலக கொடஹேவா, லக்ஷ்மன் கிரியெல்ல, சமல் ராஜபக்ச, பந்துல, காமினி லொகுகே, ஜோன் செனவிரத்ன, முன்னாள் ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மெளலானா;இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
CLICK 👇👇👇
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்

.gif)



0 Comments