சீனா தைவானை சுற்றி இராணுவ பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

சீனா தைவானை சுற்றி இராணுவ பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

சீனா, திங்கட்கிழமையன்று தைவானைச் சுற்றி பெரிய அளவிலான இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது. 

இந்த இராணுவப் பயிற்சி, தீவுகளுக்கு உரிமை கோரும் மீட்பு நடவடிக்கையாகும்.

சீனா அங்கு விமானங்களையும் கப்பல்களையும் நிறுத்தியுள்ளது. இந்த பயிற்சி கடந்த இரு ஆண்டுகளில் நான்காவது முறையாக நடைபெற்றுள்ளது. சீனாவின் இந்த செயல்பாட்டிற்கு தைவான் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Joint Sword-2024B எனப் பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி, தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனப் படைகளின் செயல்பாட்டுத் திறனைச் சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெய்ஜிங் தைவான் சுதந்திர படைகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் விதமாக அமைந்துள்ளது என அது வலியுறுத்துகிறது.

சீனா-தைவான் இடையே உள்நாட்டுப் போர் 1949-ஆம் ஆண்டு தொடங்கியது.



 



Post a Comment

Previous Post Next Post