அரசின் அதிரடி மாற்றங்கள்-19

அரசின் அதிரடி மாற்றங்கள்-19


தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம்:

தேசிய மக்கள் சக்தி இம்முறை தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக,
01. பிமல் ரத்நாயக்க
02. பேராசிரியர் வசந்த சுபசிங்க
03. கலாநிதி அனுர கருணாதிலக்க
04. பேராசிரியர் உபாலி பனிலகே
05. எரங்க உதேஷ் வீரரத்ன
06. அருணா ஜெயசேகர
07. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
08. ஜனித ருவன் கொடிதுக்கு
09. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி
10. ராமலிங்கம் சந்திரசேகர்
11. கலாநிதி நஜித் இந்திக்க
12. சுகத் திலகரத்ன
13. வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர
14. சுனில் குமார் கமகே
15. காமினி ரத்நாயக்க
16. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க
17. சுகத் வசந்த டி சில்வா
18. கீர்த்தி வெலிசரகே
19. சமிலா குமுது பிரிஸ்
20. அப்துல் ஃபதா முகமது இக்ராம்
21. ரஞ்சன் ஜெயலால் பெரேரா
22. மொஹமட் முகமது நசீர் இக்ராம்
23. க்ளோமெட் மார்ட்டின் நெல்சன்
24. ரொமேஷ் மோகன் டி மெல்
25. பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்துரே
26. புபுது நுவன் சமரவீர
27. சரத் லால் பெரேரா
28. அனுர ஹெட்டிகொட கமகே
29. ஹேமதிலக கமகே
ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணி குறுகிய கால பயிர்க் செய்கைக்காக விடுவிப்பு:

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 2024.10.10 அன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஹேமசிறி லியனகே மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அரச வாகன துஷ்பிரயோகம் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை காவல்துறையின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு அல்லது பிரித்து மறைத்து வைக்கப்பட்டு அல்லது சில இடங்களில் நிறுத்தி பாழடைவதற்கு அனுமதித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதுபற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயலில் இருக்கும்.

தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாகவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் வெளியிடப்படமாட்டாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மைத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும், தவறான தகவல்களைத் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வலியுறுத்துகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அரச நிவாரணம்:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளுக்காக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு நிதியமைச்சிற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, உரிய நிவாரணங்களை முறையாக மக்களுக்கு வழங்குவதற்கு நன்கு ஒருங்கிணைந்து செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு மேலும் அறிவித்துள்ளார்.

நீர்மட்ட நிலுவை:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

VAT வரி செலுத்தாத அர்ஜுன் அலோஸியஸ்:

அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 355 கோடி ரூபா VAT வரியை செலுத்த தவறியமையினால் W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் 
6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
CLICK 👇👇👇
அரசின் அதிரடி மாற்றங்கள்-1
அரசின் அதிரடி மாற்றங்கள்-2
அரசின் அதிரடி மாற்றங்கள்-3
அரசின் அதிரடி மாற்றங்கள்-4
அரசின் அதிரடி மாற்றங்கள்-5
அரசின் அதிரடி மாற்றங்கள்-6
அரசின் அதிரடி மாற்றங்கள்-7



 



Post a Comment

Previous Post Next Post