
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சுசி பேட்ஸ் 27 (24) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஒவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஃபிலிம்மர் 34 (23) ரன்களில் அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் சோஃபி டேவின் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தடுமாறிய எமிலியா கெர் 13 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்ததாக வந்த ஹாலிடே அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (11) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய கேப்டன் சோஃபி டேவின் 7 பவுண்டரியுடன் அரை சதமடித்து 57* (36) ரன்கள் குவித்தார். இறுதியில் மேடி கிரீன் 5* (3) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் நியூசிலாந்து 160-4 ரன்கள் எடுத்தது.
இந்தியாவுக்கு அருந்ததி ரெட்டி 1, ஆசா சோபனா 1, ரேணுகா சிங் 1 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நம்பிக்கை நட்சத்திரங்கள் ஸ்மிரிதி மந்தனா 12, ஷாபாலி வர்மா 2 ரன்களில் ஈடன் கார்சன் வேகத்தில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாக்குறைக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 15, ஜெமிமா ரோட்டரிகஸ் 13, ரிச்சா கோஸ் 12, தீப்தி சர்மா 13 ரன்களில் பொறுப்பின்றி அவுட்டானார்கள்.
இறுதியில் அடுத்து வந்த வீராங்கனைகள் போராடியும் 19 ஓவரில் 102 ரன்களுக்கு இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஸ்மேரி மைர் 4, லியா டாஹுஹு 3, ஈடன் கார்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இத்தனைக்கும் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய 10 சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் தொடர்ந்து 10 தோல்விகளை சந்தித்திருந்தது.
ஆனால் இன்று இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அந்த 10 தொடர் தோல்விகளை உடைத்து வெற்றிப் பாதைக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. மறுபுறம் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட்டதால் அந்த அனுபவத்தை பயன்படுத்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்த இந்திய மகளிர் அணி தாங்கள் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்று நிருபித்துள்ளது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments