குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு போராடினார். ஆனால் சிராஜ் புதிய பந்தில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும் 2024 காலண்டர் வருடத்தில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் அவர் வெறும் 12 விக்கெட்டுகளை 42.83 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.
அதனால் அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி வங்கதேச தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் முகமது சிராஜ் ஃபார்ம் கவலைக்குரியது அல்ல என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியன் டென் டஸ்சேட் தெரிவித்துள்ளார். அதனால் சிராஜை நீக்குவது பற்றி அந்த முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் அழகாக பந்து வீசினார். முதல் போட்டியின் கடைசி நாள் காலை எங்களின் பவுலிங் உயர்தரமாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் பந்தை நன்றாக நகர்த்தினார். இது நீங்கள் கேட்க விரும்பாத பதிலாக இருக்கலாம். ஆனால் நான் இதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை”
“அவர் நன்றாக பவுலிங் செய்யவில்லை அல்லது ஃபார்ம் நன்றாக இல்லை என்று அர்த்தமில்லை. ஒருவேளை அவர் விக்கெட்டுகள் எடுக்காத சூழ்நிலைகளில் இருக்கிறார். ஆனால் அவருடைய ஃபார்ம் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவருடன் சில டெக்னிக்கல் விஷயங்களில் நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது”
“குறிப்பாக அரௌண்ட் தி விக்கெட் திசையில் இருந்து ஸ்டம்ப் லைனில் வீசுவதில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. ஆனால் அவருடைய வேகம், துல்லியம் ஆகியவை நன்றாக இருக்கிறது. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக செயல்பட்டதாகவே நான் கருதுகிறேன்” என்று கூறினார். இதையடுத்து இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments