Ticker

6/recent/ticker-posts

உத்தரப் பிரதேசத்தில் வீடுகளை இடிக்க தடை! : மாநில பா.ஜ.க அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!


ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பின்பற்றும் பா.ஜ.க, தாம் ஆட்சி செய்கிற உத்தரப் பிரதேசம், குஜராத், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புல்டோசர் அரசை வலுவாக கட்டமைத்து வருகிறது.

சிறுபான்மையினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் போதும், குற்றம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற முன்மொழிவுடன் ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது மாநில பா.ஜ.க அரசுகள்.

இந்த புல்டோசர் நடைமுறைகளில், சிறுபான்மையினர் வீடுகள் இடிக்கப்படுவது மட்டுமல்லாமல், இஸ்லாமிய கல்விச்சாலைகள், மத ஆலயங்கள் என பல கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

அதில், இந்திய தலைநகர் டெல்லிக்கும் விலக்கில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி செய்து வருகின்ற போதும், டெல்லியின் காவல்துறை உள்ளிட்ட பல துறைகள் ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதே இதற்கு காரணமாய் அமைந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, புல்டோசர் நடைமுறைக்கு உச்சநீதிமன்ற இடைக்கால தடை விதித்து இருக்கிற போதிலும், புல்டோசர் நடைமுறை தடையில்லாமல் நடந்து வருகிறது.

அதற்கு அண்மையில் பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் இடிக்கப்பட்ட 9 சிறுபான்மையின மத ஆலயங்கள் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பகேரேச் பகுதியில் கலவரம் வெடித்ததையடுத்து, அங்கும் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வீடு இடிப்புகளுக்கு இடப்பட்ட தடையை மீறக்கூடாது என கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments