அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி பல்லக்கேல் நகரில் நடைபெற்றது. அப்போட்டி மழையால் இருதரப்புக்கும் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு பிரண்டன் கிங் 16, அலிக் அதனேஷ் 1, கேசி கார்ட்டி 6, கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 31-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் ராஸ்டன் சேஸ் 8, ரொமாரியா செபார்ட் 4, வால்ஷ் 1, அல்சாரி ஜோசப் 1 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
அதன் காரணமாக 58-8 என மேலும் சரிந்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ரூதர்போர்ட் போராடி 80 (82) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய குடகேஷ் மோட்டி 50* (61) ரன்கள் எடுத்தார். அதையும் தாண்டி 36 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸை 189 ரன்களுக்கு சுருட்டிய இலங்கைக்கு ஹசரங்கா 4, தீக்சனா 3, அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்
அதைத்தொடர்ந்து 190 ரன்களை துரத்திய இலங்கைக்கு அவிஸ்கா பெர்னாண்டோ 9, குசால் மெண்டிஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் மதுஷ்கா 38 ரன்களும் அடுத்து வந்த சமரவிக்ரமா 38 ரன்களும் அடித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ஜனித் லியாங்கே 24 ரன்களில் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் கேப்டன் அசலங்கா நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 62* (61) ரன்கள் குவித்தார்.
அவருடன் கமிண்டு மெண்டிஸ் 11* ரன்கள் எடுத்ததால் 38.2 ஓவரிலேயே 190-5 ரன்கள் குவித்த இலங்கை 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே இலங்கை வென்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவை 27 வருடங்கள் கழித்து தோற்கடித்ததை போலவே இத்தொடரிலும் இலங்கை சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அபாரமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியுள்ளது. மறுபுறம் அல்சாரி ஜோசப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்தது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments