Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-63


320. வினா : தீராத துன்பம் தருவது எது?
விடை: ஆராயாது நம்புவதும், நம்பியவரிடம் ஐயம் கொள்வதும் 
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்(510)

321.வினா:ஒரு வேலையை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
விடை: தகுதி. செயலாற்றல்உள்ளவரிடமே வேலையை ஒப்படைக்க வேண்டும் 
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(517)

322. வினா:அளவற்ற சினத்தைவிடத் தீமையானது எது?
விடை: மகிழ்ச்சியில் திளைத்து கடமையை மறத்தல் 
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.(531)

323. வினா: யாருக்குப் பாதுகாப்பில்லை?
விடை: பயந்தவர்களுக்கு 
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.(534)

324. வினா: எதனைப் போற்றிச் செயல் வேண்டும்?
விடை: நல்லோர் புகழ்ந்தவை 
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.(538)

(தொடரும்)



 



Post a Comment

0 Comments