திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -68

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -68


குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 
பூஅன்ன கண்ணார் அகத்து.

குமுதாவோட நானோ 
கோவிச்சுக்கிட்டு 
பேசாம இருக்கணும்! 
அவளுடையமலர்விழி 
துள்ளவளருதே 
அவமனசுல பொய்க்கோபம்
அதுதான் இந்த அமுதாவோட 
அழகாகும்!

குறன் 1306
துனியும் புலவியும் இல்லாயின் 
காமம் கனியும் கருக்காயும் அற்று.

ஏம்மா தேன்மொழி 
ஏழாவது படிக்கிறநீ! 
மலர்விழி அய்ந்தாவது 
படிக்கிறா! 
நல்லா பழகுறீங்க! 
நட்புத்தோழிகளா இருக்குறீங்க! 
நீஏன் அவனோட 
அடிக்கடி மொறச்சுக்குற? 
அட பூவிழி! 
நட்பு, அன்பு இதிலெல்லாம் 
சின்னதும் பெரியதுமா 
கோபதாபங்கள் விளையாட்டா 
இருந்தாதான் நல்லாருக்கும்! 
இல்லன்னா நட்புங்கறது 
முதிர்ந்த பழமும் 
இளங்காயுமா 
சுவையின்றி இருக்கும் தெரியுமா? 
சரிசரி என்னமோ போங்க! 
ஏதோ நல்லா இருந்தாசரி!

குறன் 1307
நோதல் எவன்மற்று நொந்தாரென் 
றுஅஃதறியும் காதலர் இல்லா வழி

ஏண்டி உனக்கு என்னாச்சு? 
முகத்த உம்முனு வச்சுக்கிட்டே
பள்ளிக்கூடத்துல இருந்துவார? 
பாரும்மா! அந்தக் கயல்விழி 
என்னோட பேசமாட்டேனு 
சொல்லிட்டா! 
என்ன கண்டுக்கவே 
மாட்டேங்குறாம்மா! 
என்னோட வருத்தத்த 
புரிஞ்சிக்கிற நட்புத்தோழி 
இல்லாதப்ப நான்மட்டும் 
வருத்தப்பட்டு பாரத்த 
சுமந்து என்ன ஆகப்போகுதும்மா? 
எல்லாம்என்னோட 
நேரந்தான்!

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post