
அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 8 ரன்னில் அவுட்டானதால் 41/3 என இந்தியா தடுமாற்ற துவக்கத்தை பெற்றது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் நிதிஷ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்ட அந்த ஜோடி ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது.
அந்த வகையில் நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த அந்த ஜோடியில் நித்திஷ் ரெட்டி 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் தனது முதல் அரை சதத்தை அடித்து 74 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரிங்கு சிங் தம்முடைய பங்கிற்கு 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 (29) ரன்கள் விளாசி அவுட்டானார்.
இறுதியில் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 32 (19), ரியான் பராக் 15 (6), அர்ஷ்தீப் 6 (2) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 221-9 ரன்கள் குவித்தது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிசாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 222 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு துவக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் 16, லிட்டன் தாஸ் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் சாண்டோ 11, ஹ்ரிடாய் 2 அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 46-4 என சரிந்த வங்கதேசத்திற்கு மெஹதி ஹசன் 16, ரிஷாத் ஹொசைன் 9 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். கடைசியில் முகமதுல்லா 41 ரன்கள் எடுத்து போராடியும் வங்கதேசத்தை 20 ஓவரில் 135-9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2024 டி20 உலகக் கோப்பையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய பெரிய வெற்றியாகும். குறிப்பாக டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடினாலும் டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்தார்.
ஆனால் வாயில் சவால் விட்ட வங்கதேசத்தை செயலில் களத்தில் அடித்து நொறுக்கியுள்ள இந்தியா இளம் வீரர்களை வைத்தே 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்று பதிலடி கொடுத்துள்ளது. அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ரெட்டி தலா 2, ரியான் பராக், மயங் யாதவ், அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், அரஷ்தீப் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments