
தற்போது ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து,கனடாவின் இந்த எச்சரிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள இந்திய தரப்பினர் இந்தியாவின் வர்த்தகத்தில் கனடாவின் பொருளாதாரத் தடை ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
2023 - 24இல் கனடாவுடனான இருதரப்பு வர்த்தகம் 8.39 பில்லியன் டொலர்களாக இருந்தன. இது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்ததாக இந்திய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் போன்றவை கனடாவில் இருந்து கணிசமான அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த இடைவெளியே ஏனைய நாடுகளை கொண்டு குறிப்பாக அவுஸ்திரேலியா, மியான்மர், மொசாம்பிக் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளை கொண்டு நிரப்பிவிடலாம் என்றும் இந்திய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று, இந்திய வணிகங்கள், மாணவர்கள் மற்றும் பிற நாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு ஏராளமான ஏனைய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் இந்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டு 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள மருந்துகளை கனடாவுக்கு அனுப்பியிருந்தாலும், கனடாவின் எச்சரிக்கை இதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏனெனில், இது 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான மொத்த ஏற்றுமதியில் அது ஒரு சிறிய பகுதியாகும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
.gif)



0 Comments