Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்ந்தால் .....!ஹெஸ்புல்லா எச்சரிக்கை


இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்ந்தால்,எங்கள் தாக்குதல் மிகக் கடுமையானதாயிருக்கும், என்று ​​ஹெஸ்புல்லா போராளிகள்  
இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவத்துக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹெய்ஃபா துறைமுக நகருக்கு அருகே உள்ள இராணுவ தளத்தின் மீது கடந்தஞாயிற்றுக்கிழமை இரவு ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ஹெஸ்பொல்லா தனது இராணுவ வலிமையை இஸ்ரேலுக்கு உணர்த்தியுள்ளது..

பின்யாமினா பகுதியில் உள்ள இஸ்ரேலிய உணவு விடுதியைத் தாக்கியதலில் பல இஸ்ரேலிய பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். 

ட்ரோன்களின்  தாக்குதலின் போது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை திசைதிருப்ப டஜன் கணக்கான ராக்கெட்டுகளை வீசி அந்தத் தாக்குதலை வெற்றிகரமாய் முடித்ததாக ஹெஸ்பொல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் ஆளில்லா ட்ரோன்கள் "இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ரேடார்களுக்குத் தெரியாமல் கடந்து சென்று" இலக்கைத் துள்ளியமாக தாக்கியதாகவும் ஹெஸ்பொல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"இந்த ட்ரோன்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு ரேடார்களுக்குத் தெரியாமல்  பின்யாமினாவில் உள்ள உயரடுக்கு கோலானி படைப்பிரிவின் பயிற்சி முகாமில் அதன் இலக்கை அடைந்தன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இஸ்ரேலிய எதிரியின் டஜன் கணக்கான அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்த அறைகளில் ட்ரோன்கள் வெடித்தன" என்று ஹெஸ்பொல்லா தெரிவித்துள்ளது. 

வியாழன் அன்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதளில் கிட்டத்தட்ட இரண்டு டஜன் பேரின் உயிரைக் கொன்றதற்கு பதிலடியாக ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஹெஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர். 

ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு ரேடார் அமைப்புகளை வெற்றிகரமாக ஊடுருவி ஹைஃபாவிற்கு அருகிலுள்ள இராணுவ தளத்தைத் தாக்கின. 

லெபனானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்தாவிட்டால், பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக அது உறுதியளித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் நடவடிக்கையானது 110க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும், லெபனான் மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை எதிர்கொள்ளும் வகையில் இது ஒரு சிறிய தாக்குதல்மட்டுமே என்று ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளனர்.
 
திங்களன்று இஸ்ரேலிய நிலைகளுக்கு எதிராக ஹெஸ்பொல்லா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலிய பயங்கரவாதிகலுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தியது.   

தாக்குதலைத் தொடர்ந்து மத்திய இஸ்ரேலில் விமான சைரன்கள் கேட்டன.  

ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய கடற்படை தளத்தையும் ஹிஸ்புல்லா தாக்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட ஷெபா பண்ணைகளில் உள்ள இஸ்ரேலிய தளங்களும் குறிவைக்கப்பட்டன.
  
ஹிஸ்புல்லாவின் துணைப் பொதுச்செயலாளர் ஷேக் நைம் காசிம் கடந்த வாரம் ஒரு உரையில் இஸ்ரேலிய கனவுகளை நிராகரித்தார். காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை லெபனான் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் 2006 இல் லெபனான் மீது போர் தொடுத்தது ஆனால் ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவத்தை 34 நாட்களுக்குள் பின் பின்வாங்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் 



 



Post a Comment

0 Comments