சினிமாவை மிஞ்சும் த்ரில்....ஈரான் பாராளுமன்ற சபாநாயகரின் பெய்ரூட் விஜயம்...!

சினிமாவை மிஞ்சும் த்ரில்....ஈரான் பாராளுமன்ற சபாநாயகரின் பெய்ரூட் விஜயம்...!


ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாப்பின் பெய்ரூட் விஜயம் லெபனானை ஆதரிப்பதில் ஈரானின் உறுதிப்பாட்டின் தைரியமான நிகழ்ச்சியாகும்.

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாக்கர் காலிப் சனிக்கிழமையன்று தனது சொந்த விமானத்தை தானே இயக்கி பெய்ரூட்டில் உள்ள ரஃபிக் ஹரிரி விமான நிலையத்திற்கு வந்தபோது உலகமே அதிர்ச்சியடைந்தது.

ஈரானியசபாநாயகர் பின்னர் லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர் பகுதிகளின் இஸ்ரேலின் குண்டு வீச்சில் பாதிப்படைந்த பகுதிகளின்  இடிபாடுகள் வழியாக நடந்து பார்வையிட்டார்.

85 டன் அமெரிக்க வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ்வை இஸ்ரேலிய  பயங்கரவாதிகள் படுகொலை செய்ததன் பின்னர் மக்களின் நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்தப் பகுதியில் , ஈரானிய சபாநாயகரை வரவேற்க மீண்டும் மக்கள் குழுமியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற சபாநாயகரைப் பார்ப்பதற்காக சேதமடைந்த வீடுகளில் இருந்து வெளிவரும் மக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்த பிறகு முதல் முறையாக மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் உணர்கிறோம். "பாராளுமன்ற சபாநாயகரின் இந்த தைரியமான செயல் எங்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றது.இது நன்றாக இருக்கிறது,நாங்கள் மறக்கப்படவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கின்றது " என்று ஒரு இளம் தாய் தெரிவித்தார்.

லெபனானிலிலிருந்து ஈரானிய பத்திரிகையாளர் ஹொசைன்பாக் கருத்துத் தெரிவிக்கையில் , "இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் தினமும்  பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஈரானிய சபாநாயகர் கலிபாப்பின் பெய்ரூட் விஜயம் எதிர்பாராத ஆனால் மெய்சிலிர்க்க வைக்கின்றது.மிகவும் தைரியமான பாராட்டப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை" என்று கூறுகிறார். 

மேலும் அவர் குறிப்பிடும்போது "48 மணி நேரத்திற்கு முன், இஸ்ரேல் இந்த பகுதியில் குண்டு வீசியது. எதிரி ட்ரோன்கள் இன்னும் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருக்கின்றன. லெபனானியர்களுக்கு ஆதரவைக் காட்ட இதுபோன்ற இடத்திற்குச் செல்வது தைரியம். , இது ஒரு உண்மையான போராளி மட்டுமே செய்யும் ஒன்று. ."

ஈரான் பாராளுமன்ற சபாநாயகரின் இந்த தைரியம் மிகுந்த பயணமானது ஒரு உண்மையான போராளியின் மன வலிமையைக் காட்டுகின்றது.

ஈரானிய சபாநாயகர் கலிபாப் அரசியல் மற்றும் இராணுவம் இரண்டிலும் அனுபவம் வாய்ந்தவர். 

வெறும் 22 வயதில், ஈரான்-ஈராக் போரின் போது இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (IRGC)பிரிவுக்கு தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 

IRGCவிமானப்படையின் தளபதியாக பணியாற்றியவர் , IRGC இல் பல ஆண்டுகள் சேவைக்குப் பிறகு, அவர் அரசியல் அரங்கிற்கு மாறினார். ஈரானின் புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானியின் நெருங்கிய நண்பராக அறியப்படுகிறார். 

“இந்தப் பயணம் லெபனான் மக்களுக்கும் போராளிகளுக்குமான ஆதரவின் சக்திவாய்ந்த நிரூபணமாக விளங்குகிறது. எந்தச் சூழ்நிலையிலும் போராளிகளுக்கும் மற்றும்  லெபனானுக்கும்  ஈரான்  துணைநிற்கும் என்பதை இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

அசைக்க முடியாத வலிமை மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்கான தெளிவான விருப்பத்தின் மூலம் மட்டுமே பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கலிபாப் தெரிவித்தார்.

மாஸ்டர் 




 



Post a Comment

Previous Post Next Post