Ticker

6/recent/ticker-posts

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு

செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று இந்தியா அறிவித்துள்ளதற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலம் விட வேண்டும் என்று முகேஷ் அம்பானி, சுனில் பார்தி மிட்டல் ஆகியோர் இந்திய அரசை வலியுறுத்தினர்.

ஆனால், நிர்வாக ரீதியில் உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம் கூறியது.

இந்நிலையில், ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா , உலக அளவில் செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படுவதில்லை;

நிர்வாக ரீதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதையே இந்தியாவும் பின்பற்றும் என்றார்.

அம்பானியின் வலியுறுத்தலுக்கு பணியாமல் முடிவை அறிவித்த அமைச்சர் சிந்தியாவை எலான் மஸ்க் பாராட்டி, "இந்தியாவுக்கு சேவைகள் வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் சிறப்பாக செயல்படும்' என்றார்.

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

0 Comments