Ticker

6/recent/ticker-posts

வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்

வியட்நாமிய நாடாளுமன்றம் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங்கைத் (Luong Cuong) தேர்ந்தெடுத்துள்ளது.

67 வயது கூங் தற்போதைய அதிபர் டோ லாமிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் இன்று பங்கேற்ற 440 உறுப்பினர்களும் ஜெனரல் கூங்கிற்கே வாக்களித்திருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவி வியட்நாமில் ஆக உயரிய பொறுப்பாகக் கருதப்படுகிறது.

அதற்கடுத்த நிலையில் அதிபர் பொறுப்பு உள்ளது. வியட்நாமின் அதிபர் டோ லாம் தற்போது அந்த இரு பொறுப்புகளையும் வகிக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் நெடுங்காலத் தலைமைச் செயலாளர் நுவென் ஃபு துரோங்கின் (Nguyen Phu Trong) மறைவுக்குப் பிறகு திரு லாம் அந்தப் பொறுப்பையும் ஏற்றார்.

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

0 Comments