அமெரிக்காவின் போலி நாடகம்,தோல்வியை சந்திக்கும் என்பது உறுதி!

அமெரிக்காவின் போலி நாடகம்,தோல்வியை சந்திக்கும் என்பது உறுதி!


சமீபத்தில் இஸ்ரேலுக்கு,அமெரிக்காவின் THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியது சம்பந்தப்பட்ட செய்திகள் மேற்கத்திய ஊடகங்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது, 

ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலளிக்க இஸ்ரேலுக்கு  THAAD ஏவுகணை பாதுகாப்பு  மிகவும் முக்கியமாக  இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள்  செய்திகள் வெளியிட்டன.

மேலும்  ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதியின் கைது அல்லது மரணம் பற்றிய இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பரப்பப்பட்டன.

மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போலி செய்திகள் பரப்புவதன்  மூலம் தங்கள் ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்கின்றார்கள்.

இஸ்ரேலிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயலை மேற்கத்திய ஊடகங்கள் பகிரங்கமாகவே செய்கின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

இவர்களின் நோக்கம் ஈரானை வலுவிழக்கச் செய்ய வேண்டுமென்பதே.

ஆனால் ஈரான் மிரட்டலுக்கு அடிபணியும் நாடு அல்ல என்பதை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.ஈரானிய மக்கள் மேற்குலக நாடுகளின் சதிவலையில் சிக்குபவர்கள் இல்லை என்பதையும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மேற்குலக நாடுகள் உணர்ந்துகொள்வது அவசியம்.

மேலும் அமெரிக்காவின் போலி நாடகம்,தோல்வியை சந்திக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஒரு பக்கம் சமாதனம் என்ற போலியான முகத்தைக் காட்டி பாலஸ்தீன் மக்களை கொன்று குவிப்பதற்கு ஆயுதங்களை வழங்கி வருவதும்,உலக நாடுகளுக்கு "நாங்கள் சமாதானத்தை கொண்டுவர முயற்சிப்பதாகவும்" போன்ற போலியான முகங்களை காட்டுவதும் மிகவும் கொடூரம். 

அமெரிக்காவினதும் ,மேற்குலக நாடுகளினதும் இந்த அப்பட்டமான சூழ்ச்சிக்கு முன்னால் உலகம் அமைதியாக இருக்க முடியாது. 

தவறான தகவல்களை ஆயுதமாக்குவது என்பது சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயகரமான போக்கு ஆகும். 

அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இல்லாமல்,இஸ்ரேல் இராணுவைத்தால் போராளிகளின் தாக்குதலை ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியாது.

எனவே சர்வதேச சமூகம் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது 

இவர்களின் இந்தப்போக்கு எதிகாலத்தில் உலக அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

"பாலஸ்தீன் மக்களுக்கு சுதந்திரமான தனி நாடு இல்லாமல் இஸ்ரேலுக்கு சுதந்திரமாக வாழ முடியாது "என்று விடுதலைப் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைக்காக போராடும் மக்களுக்கு வெற்றி நிச்சியம் 

மாஸ்டர் 



 



Post a Comment

Previous Post Next Post