விஸ்தரிக்கப்படும் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயம்

விஸ்தரிக்கப்படும் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயம்


தெஹிவளை பாலத்துக்கு அருகில் உள்ள மூவர் வீதியில் பல நெடுங்காலமாக மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் என்னும் பெயரில் சிறிய ஆண்-பெண்  பாடசாலை ஒன்று  இயங்கி வருகிறது. இப்பாடசாலைக்கு இப்பகுதியின் சுற்றுச் சூழலில் உள்ள   மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

காலப்போக்கில் தெஹிவளை  கல்கிஸ்ஸை களுபோவில போன்ற பகுதிகளில் அதிகமாக முஸ்லிம்கள் குடியேறி வருவதனால் இப்பாடசாலையில் பாரிய இடப் பிரச்சினை உருவாகியது.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி, கொழும்பு  தனவந்தர் ஒருவர் இப்பாடசாலைக்கு நான்கு மாடி கட்டிடம் ஒன்றை அன்பளிப்புச்  செய்தார்.

இருந்தாலும் தற்போதும் இதன் இட நெருக்கடி மேலும்  தொடர்ந்து வருகிறது. இந்த இடத்தில் வேறு கட்டிடங்களை அமைக்க இடமும் இல்லை. 

பானந்துறை பழைய வீதி ஹொறே தொடுவையில் உள்ள, ஒரே ஒரு  முஸ்லிம் வித்யாலயத்தை அடுத்து, கொழும்பு ஸாகிரா கல்லூரி வரை உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை மீலாத் முஸ்லிம் வித்தியாலயமாகும். எனவே இதற்கு   இடைப்பட்ட முஸ்லிம் மாணர்களுக்கு எந்தப் பாடசாலையும் இல்லை. இதனால் இதில்  கடும் இடப்பற்றாக்குறை நிலவியது. 

எனவே வேறு காணிகளை கொள்வனவு செய்து பாடசாலை ஒன்றை உருவாக்குவது என்பது இப்பகுதியின் இட நெரிசலையும் காணியின் மதிப்பீடுகளையும் பார்க்கும் பொழுது முடியாத காரியமாகும்.

இது சம்பந்தமாக கடந்த காலங்களில் பல முஸ்லிம் அமைச்சர்களிடமும், முஸ்லிம் ஆளுநர்களிடமும்,  முக்கியஸ்தர்களிடமும் சென்றதில் நானும் ஒருவன் என்றவகையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. 

எனவே இப்பாடசாலையில் நிலவி வந்த இடப் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்ய தெஹிவளை கவ்டான வீதியில் மாணவர்கள் பற்றாக் குறையினால்  மூடப்பட்டுள்ள  உள்ள,  ஸ்ரீ சுமங்கல வித்யாலயத்தை மீலாத் முஸ்லிம் பாடசாலைக்கு பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பல வருடங்களாக முயற்சிகள்செய்த போதிலும்,  பல்வேறு காலப்பகுதியில் நடந்த ப‌ல்வேறு பிரச்சினைகளால் அவை ஆகாயத்தில் வரைந்த ஓவியமாக பயனற்றுப்போனது.

இந்நிலையில்  தற்போதைய ஆட்சி மாற்றத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடம்,  இந்த விடயத்தில் சளைக்காமல் அதி தீவிரமாக ஈடுபட்ட  பொறியியளார்,  சகோதரர் நஸ்ரூதீன் அவர்கள் இவை பற்றி  ஆளுநரிடம் முறையிட்டபோது, இப்பகுதியின் தமிழ் பேசும் மாணவர்களின் கவலையான நிலைப்பற்றி தீவிரமாக ஆராயப்பட்டு,  இதற்கு அவசர  தீர்வு காணும் வகையில் கவ்டான யூனியன் பிலேஸில் உள்ள,  தற்போது மூடப்பட்டு இருக்கும் ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தை தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கையளிக்க,  மேல் மாகாண ஆளுநர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன்படி,  மூன்று மாடி கட்டிடங்கள் மூன்றை அமையப் பெற்றுள்ள ஸ்ரீ சுமங்கள வித்யாலயத்தை தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்யாலையிடம் கையளிக்கும்படி பிலியந்தலை வளைய கல்வி  அத்தியேற்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது  மீலாத் முஸ்லிம் வித்யாலயத்தில் தாரளமாக இடம் உள்ளதால்,  இப்பகுதி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இப்பாடசாலையில் சேர்க்கும்படி வேண்டப்படுகின்றனர்.

நாட்டின் எந்த சமூகத்திற்கும்,  எந்தப் பிள்ளைக்கும்,  எவருக்கும் பிரயோசனமின்றி பாழடைந்து தூர்ந்து போக இருந்த இந்தப் இப்பாடசாலையை, எந்த  வித்தியாசங்களும், பாரபட்சங்களும்  இன்றி,  அனைத்து பிள்ளைகளும் இலங்கை நாட்டின் வருங்கால சொத்துக்கள் என கருத்தில் கொண்டு எதிர்கால நாட்டின்  சந்ததிக்காக இந்தப்  பாடசாலை விடுவித்தது நாட்டின் ஒற்றுமை வரலாற்றுக்கு ஒரு  எடுத்துக்காட்டாகும். 

மேலும் இப்பகுதியில் பெண்களுக்கான முஸ்லிம் பாடசாலை பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒன்று மாத்திரமே காணப்படுகின்றது.

இவற்றிலும் கடும் இட நெருக்கடி காணப்படுவதால், கடந்த நல்லாட்சி காலத்தின் போது, மெரைன் டிரைவ் வீதி தெஹிவளை பாலத்திற்கு  அடுத்துள்ள கடற் படைத்தளத்தின் அடுத்தபடியாக அமைந்துள்ள ஒரு இடத்தை பாராளுமன்ற உறுப்பினராக இந்த முஜிபூர் ரஹ்மான் அவர்கள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஒரு முஸ்லிம் பாடசாலையை அமைக்க அவ்விடத்தை  பெற்றிருந்தார்.

அவ்விடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பண்டகசாலை தற்போது இயங்கி வருவதால், அவற்றை வேறொரு இடத்துக்கு மாற்றி அவ் இடத்தில் பாடசாலை அமைத்து பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி யிடம் ஒப்படைக்க அப்போது  ஆவன செய்யப்பட்டது.

இதனிடையே நல்லாட்சி மாறி,  கோட்டாபே ராஜபக்சே அவர்களின் ஆட்சியின் கீழ் G L பீரிஸ் அவர்கள் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்பு   இதற்கான வேலைகள் தடைப்பட்டு முயற்சிகள் கைவிடப்பட்டு இக்காணியானது பாடசாலைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும்  நிலையில் மேற்கொண்ட முயற்சிகள் தடைப்பட்டது.

பேருவளை ஹில்மி



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post