Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு : பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்... விவரம் என்ன ?


மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மல் நகர் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வுமானஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பின்புறம் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலம், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை காவலில் எடுத்து விசாரணை நடத்த மஹாராஷ்டிர போலிஸார் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோயை சபர்மதி சிறையை தவிர வேறு எந்த சிறைக்கும் அனுப்பக் கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், அந்த உத்தரவை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. இதனால் லாரன்ஸ் பிஷ்னோயை விசாரிக்க உள்துறை அமைச்சகத்திடம் மஹாராஷ்டிரா போலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kalaignarseithigal



 



Post a Comment

0 Comments