Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா சுரங்கத்தில் இது எல்லாம் இருக்கா? - இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!


மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இதற்கு நடுவே, ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.

கடந்த 27ஆம் தேதி இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். பின்னர், ஹிஸ்புல்லாக்கள் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பதிலுக்குப் பதில் தாக்குவது என்ற புதிய வியூகத்தை தாங்கள் கையில் எடுத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேசமயத்தில், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சுரங்கப்பாதை வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெற்கு லெபனானில் உள்ள ஒரு சுரங்கப்பாதைக்குள் செல்கின்றனர். ஒரு 100 மீட்டர் தூரம் அவர்கள் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும், அந்த 100 மீட்டரில், இரும்பு கதவுகள் கொண்ட அறை, ஏ.கே.47 துப்பாக்கிகள், படுக்கை அறை, கழிவறை, ஜெனரேட்டர்களின் சேமிப்பு அறை, தண்ணீர் தொட்டிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

அந்த வீடியோவில் பேசும் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர், “நாங்கள் தெற்கு லெபனானின் எல்லை கடந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் தெற்கு லெபனான் கிராமங்களில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிவதற்காக செல்கிறோம். இது நாங்கள் காசாவில் பார்த்த சுரங்கங்கள் போல் இல்லை” என்று பேசுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாகிவருகிறது. ஒருபுறம் ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என அறிவித்திருப்பதும், மறுபுறம் இஸ்ரேல் ராணுவத்தினர் ஹிஸ்புல்லாவின் சுரங்கத்தினுள் நுழைந்து அதனை வீடியோவாக வெளியிட்டிருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments