Ticker

6/recent/ticker-posts

இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் இதய வால்வு சரியாக வேலை செய்யவில்லை என அர்த்தம்!


இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. இதயத்தில் உள்ள வால்வுகள் ரத்தம் சரியான திசையில் செல்ல உதவுகின்றன.  இந்த வால்வுகள் சரியாக செயல்படாவிட்டால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்தப் பதிவில், இதய வால்வு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

இதய வால்வுகள் என்பவை இதயத்தின் நான்கு அறைகளுக்கு இடையே உள்ள திறப்புகளை கட்டுப்படுத்தும் திசுகளால் ஆனவை. இந்த வால்வுகள் ஒரு திசையில் மட்டுமே ரத்தத்தை செல்ல அனுமதிக்கின்றன. இதயம் சுருங்கும்போது வால்வுகள் மூடப்பட்டு, ரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன. இதயம் தளறும்போது வால்வுகள் திறந்து ரத்தம் அடுத்த அறைக்கு செல்ல அனுமதிக்கின்றன. 

இதய வால்வு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

சிலருக்கு பிறவியிலேயே வால்வின் அமைப்பு மோசமாக இருக்கும். வயதாவதால் வால்வு தடிமனாகி, கடினமாகி, சரியாக திறக்கவோ அல்லது மூடவோ முடியாமல் போகலாம். 

காய்ச்சல், மூட்டு வீக்கம் ஏற்படுத்தும் ரூமேடிக் காயம், இதய வால்வுகளை சேதப்படுத்தும். ரத்த அழுத்தம் காரணமாகவும் இதய வால்வுகள் சேதமடையலாம். சில நபர்களுக்கு இதய தசை நோய் காரணமாக இந்த வால்வுகள் சரியாக செயல்படாமல் போகும். 

இதய வால்வு பிரச்சனைகளின் அறிகுறிகள்: 

இதய வால்வு பிரச்சனைகளின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடலாம். சில சமயங்களில் எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் இருக்கும். சில பொதுவான அறிகுறிகள்:

மூச்சு விடுவதில் சிரமம் 

களைப்பு 

கால்களில் வீக்கம் 

மார்பு வலி 

தலைச்சுற்றல் 

மயக்கம் 

ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

இதய வால்வு பிரச்சினைகளுக்கான சிகிச்சை, பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். சில சமயங்களில் மருந்துகள் கொடுத்து சிகிச்சை செய்யப்படும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் சேதமடைந்த வால்வை மாற்றுவது அல்லது சரி செய்ய வேண்டியிருக்கும். 

இதய வால்வு பிரச்சனைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணமடையும் வாய்ப்புள்ளது. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இதய வால்வு பிரச்சினைகளை தடுக்கலாம். மேலே, குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. 

kalkionline


 Ai SONGS

 



Post a Comment

0 Comments