Ticker

6/recent/ticker-posts

அரசின் அதிரடி மாற்றங்கள்-22


கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பம்:

2024.10.21ம் திகதி முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 2024.10.15ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்காக இஸ்ரேலைக் கண்டித்துப் பேசிய புதிய ஜனாதிபதி!

இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் எவருமே, பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் செய்துவரும் அநியாயங்களை எதிர்த்துப் பேசியதில்லை.

நம் நாட்டில் இதுவரை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் கூட  இஸ்ரேல் செய்வது பிழை என்று இன்றுவரை ஆணித்தரமாகப் பேசியதில்லை.

மேலும் பலஸ்தீன் மக்களை,  பெண்கள் - சிறார்கள் என்று கூடப் பார்க்காமல்  இஸ்ரேல் அநியாயமாக கொலை செய்து வருவதை  எவருமே ஒரு பொருட்டாகக் கணித்துப் பேசியதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட, பணத்தின் மூலம் உதவி செய்தாரே தவிர, தற்போதைய ஜனாதிபதி பேசியுள்ளார் போன்று கண்டித்து பேசவில்லை.

அதற்குக் காரணம் என்னவென்றால் நாம் எதிர்த்து பேசினால் அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் நாடுகளை பகைத்துக் கொள்ள வேண்டி வரலாம்  என்ற பயமே!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் பாலஸ்தீன தூதுவராலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அவரது விஜயத்தின்போது, ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்க எவருக்கும் பயப்படாமல் நியாயத்தைப் பேசியுள்ள  வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.

நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தில் கல்ஹின்னையின் புத்தம் புதிய அரசியல்வாதி M.S.M. பஸ்மின் ஹாஜியார்!

கல்ஹின்னையில் பிறந்து அல்மனார் மற்றும் ஸஹிராக் கல்லூரிகளில் பயின்றுள்ள M.S.M. பஸ்மின் ஹாஜியார்,  நாடாளுமன்றம் செல்வதென்பது கல்ஹின்னைக் கிராமத்தவர் மற்றும் அதனை சுற்றிவாழும் கிராமங்களிலுள்ள மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிதரும்  விடயமாகும்!

தற்போது கம்பளையில் பல தொழிலகங்களுக்கு உரிமையாளராகவுள்ள இவர், கம்பளை பஸ்தரிப்பிட வர்த்தக சங்கத்தின் தனாதிகாரியும், ஹல்கொல்லை ஜும்ஆ பள்ளிவாசலின் பொருளாளருமாவார்.

சமூக சேவையாளரும், கொடைவள்ளலுமான பஸ்மின் ஹாஜியார்,  அமைதியான சுபாவமும்,  அனைவருடனும் அன்பாகப் பழகக் கூடிய  புத்திசாதுரியமும் மிக்கவருமாவார்!

நீண்டகாலமாக தேசிய மக்கள் சக்தியின் பாசறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ள இவர், நாடு அனர்த்த நிலைக்கு வந்தபோது, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பல ஆயிரம் பேர்களுள் ஒருவருமாவார். 

இவரது நோக்கிலும், போக்கிலும் நம்பிக்கை கொண்ட கட்சியின் மேலிடம், இம்முறை பொதுத் தேர்தலில் இவரை கண்டி மாவட்ட வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. 

பல ஆண்டுகளாக தேசிய மக்கள் சக்தியில் இணைந்து பணி செய்துவரும் இவர், கட்சியின் கண்டி மாவட்ட மற்றும் கம்பளைத் தொகுதி நிறைவேற்றுக் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகின்றார்.

தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை நாம் பெறுவது இன்றியமையாததாகும். 

இது நமது சமூகத்திற்குத் தேவையான வளங்கள், நன்மைகள் மற்றும் வாய்ப்புக்களைப் பாதுகாக்க உதவும்.

பஸ்மின் ஹாஜியார் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தால், எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடியவராக, சமூகத்துக்கு அதிக அளவான சேவைகளைச் செய்கின்ற வலிமையைப் பெறுவார் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

அதுமட்டுமன்றி,  கண்டி மாவட்டத்திலுள்ள கிராமங்களின் குறைபாடுகளை அறிந்து அவற்றுக்கான அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து, அதிக ஈடுபாட்டுடன் செயல்படக் கூடியவர் என்று அனைவரும் இவரை நம்பலாம்!

சுனாமி வீடுகள்!

கட்டி முடிக்கப்பட்டு 14 வருடங்களுக் குப் பிறகு நுரைச்சோலை சுனாமி வீடமைப்பு திட்டத்தின் 500 வீடுகள் இப்போது வழங்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அறிவித்திருப்பது, வீடுகளைப் பெறப்போகும்
பயனாளிகளுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்!
CLICK 👇👇👇



 Ai SONGS

 



Post a Comment

0 Comments