பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்

பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்

எக்ஸ் தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் எக்ஸ் சேவைகளை பிரேசில் மீட்டெடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, எக்ஸ் தளத்திற்கு எதிரான தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று பிரேசில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் அந்த அபாரதத் தொகையைத் தவறான வங்கிக்கணக்குக்கு எலான் மஸ்க் செலுத்தியதால் விவகாரம் இன்னும் சிக்கலானது.

தவறாக அனுப்பப்பட்ட தொகையை மீண்டும் எலான் மஸ்க்குக்கே அனுப்பி வைக்கும்படி பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post