இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் GGl ஜபீன் முஹம்மத்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் GGl ஜபீன் முஹம்மத்


2024 பாராளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் நமக்காக நாம் என்ற தனித்துவ சிந்தனையை உருவாக்கி 
DUA கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார்,நன்பன்.தேஷபந்து, தேஷமண்ய, விஷ்வகீர்த்தி,லங்காபுத்ர.GGl Jabeen Mohamed 

யார் இந்த  GGl ஜபீன் முஹம்மத்

கண்டியைச் சேர்ந்த பூர்வீக முஸ்லிம்களின் வாரிசான கல்கட்டிய கெதர இஸ்மாயில் ஜமால்தீன் மற்றும் நைனா முஹம்மது சாஹுல் ஹமீத் உம்மு ஹனிதா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக 1976 ஆண்டு 07 மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை  பொள்ககவளையில் பிறந்தவர்.

கல்வியில் சாதாரண தரம் வரை பாபுல் ஹசன் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் பயிற்சியுடன் கணினி பயிற்சிகளும் பயின்றவர்.
 
தற்போது குருணாகல் எலபடகாம பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவர் ஜனநாயக ஐக்கிய முன்னணி DUA கட்சியின் குருணாகல் மாவட்ட  நிறை வேற்றுக் குழு உறுப்பினரும் ஆவார். 

குருணாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்.

குருநாகல் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின்  குறைபாடுகளை நன்கு ஆராய்ந்து இனம் கண்டு அதற்கான முன்மொழிவுகளை அரசுக்கு கொண்டு சேர்த்தவர்.

எதிர்கால சந்ததிகளின் தொழில் வழிகாட்டலின் குறைபாடுகளை உணர்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க திட்டங்களை அறிந்தவர்.
2010 முதல் நாட்டில் நடந்த அனைத்து இனவாத அசம்பாவிதங்களிலும் நியாயத்திற்காக சமூக வலைதளங்களின் ஊடாக குரல் எழுப்பி பல அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை எடுத்துரைத்து அரபு நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு வரை இலகங்கை முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளையும் கொண்டு சேர்க்க செயல்பட்ட அவர்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் முதலாவதாக லண்டனில் நடந்த  ஆர்ப்பாட்டம் தொடக்கம் இறுதியாக இம்ரான் கானின் வருகையே முன்னிட்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வரையிலான
உலகளாவிய ரீதியில் நடந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளை வழங்கி செயல்பட்டவர்.

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் ஜனாஸாக்களை எரிப்பதற்கான அனுமதி கைஒப்பம் இட்டு அனைவரும் விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில். ஜனாஸாக்களை எரிப்பதற்கான கைஒப்பம் வைக்க வேண்டாம் என்ற கருத்தை முன்னிறுத்தி முன்னாள் ஆளுநரின் ஊடாக பேசவைத்து ஜனாஸாக்களை எரிக்க முடியாமல் அரசினை திணற வைத்தவர். 

சமூகத்திற்கான ஒரு ஊடகம் தேவை என்ற தலைப்பில் பத்து வருடம் முயற்சியில் சர்வதேசத்தில் இருக்கும் நண்பர்களின் ஊடாக ஊடகத்தை பதிவு செய்து சமூகத்திற்கான ஊடகத்தை உருவாக்கியவர்.
நாடளாவிய ரீதியில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கியவர்.

சிறுபான்மை மக்களின் தனித்துவ அரசியலுக்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வரை சென்று குரல் கொடுத்தவர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நூறாண்டு பூர்த்தி விழாவிற்கு விசேட அழைப்பிதழ் மூலம் அழைக்கப்பட்டவர்.

தேசப்பற்றுள்ள நல்லிணக்கப்பாட்டுடன்  நன்னடத்தை செயல்பாட்டுக்குரிய  பௌத்த கலாச்சார அமைச்சின் அங்கீகாரத்துடன்  கௌரவிக்கப்பட்டவர்.

சிறுபான்மை இனத்திற்காக குருநாகல் மாவட்டத்தை தலைமையாகக் கொண்டு ஒரு தனித்துவ அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கி
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி என்ற ஒரு கட்சியை  உருவாக்கி அரசு அங்கீகாரத்திற்காக அனுமதிக்காக காத்திருப்பவர்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்க அரசிடம் வலியுறுத்தியவர்.

ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்காக பெற்றோரை வீதியில் இறங்கி போராடும் படி அழைத்தவர்.

தரமான அதிபர்களை பாடசாலைகளுக்கு நியமிக்க முயற்சி செய்தவர்.

சமூக நலனுக்காகவும் சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அரசியலுக்காகவும் காலநேரம் காலம் பார்க்காமல் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் செய்தவர்.

மூவின மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.
இவ்வாறு சமூகத்திற்காக அயராது பாடுபடும் தூரநோக்கு சிந்தனையாளர்களை பாராளுமன்றம் அனுப்ப வாக்காளர்களாகிய நானும் நீங்களும் முயற்சிக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைவோம் மாற்றத்தை உருவாக்குவோம்.

எதிர்கால சந்ததிகளுக்கு வரலாற்றில் மாறுபட்ட அரசியலை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.

சிந்திப்போம் செயல்படுவோம் சிறுபான்மையின் தனித்துவத்தை பாதுகாப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

தொகுப்பு 
R.முகம்மத் ராபீ




 



Post a Comment

Previous Post Next Post