Ticker

6/recent/ticker-posts

Ad Code



அரிசியில் சாயம் கலந்த உரிமையாளருக்கு அபராதம்

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசி கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்கப்பட்டது .

அவற்றை மேலதிக பரிசோதனைகளுக்காக அநுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் , அரிசியில் சாயம் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

அதன் பிரகாரம் குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை (04) அன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் வழக்கு விசாரணையில் உரிமையாருக்கு 20 000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

tamilmirror



 



Post a Comment

0 Comments