Ticker

6/recent/ticker-posts

Ad Code



இஸ்ரேல் டைம் மிஷினை வைத்து வயதை குறைப்பதாக ரூ.35 கோடியை ஏமாற்றிய உ.பி. தம்பதி


உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் இஸ்ரேல் டைம் மெஷின் வைத்து வயதை குறைப்பதாக ரூ.35 கோடி ஏமாற்றி தம்பதியை  போலீஸார் தேடி வருகின்றனர்.

65 வயதானவர்களை 25 வயதுடையவர்களாக மாற்றுவதாக கூறி, ராஜீவ் குமார் துபே அவரது மனைவி ராஷ்மி துபே மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

டைம் மெஷின் மூலம் ஆக்ஸிஜன் சிகிச்சை அளித்தால் வயது மூப்பை ஒரு சில மாதங்களில் குறைத்துவிட முடியும் என மக்களை கவரும் வகையில் போலி விளம்பரங்களை வெளியிட்டு ஒவ்வொருவரிடமும் ரூ.90,000 வரை கட்டணம் வசூலி்த்துள்ளனர்.

ரூ.7 லட்சத்தை இழந்த ரேனு சிங் என்பவர் புகார் அளித்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஏராளமானோரிடம் ரூ.35 கோடி வரை அந்த தம்பதி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் பயன்படுத்திய டைம் மெஷினை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த டைம் மெஷின் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட து என்று போலீஸார் தெரிவித்தனர்.

nambikkai



 



Post a Comment

0 Comments