
13/10/2024 அன்று காலை 10-30 மணிக்கு,கோவை கணபதி டெக்ஸ்டூல் எதிரில் தமிழறிஞர் விஜய சண்முகம் அவர்களின் டிவி தொழிலகக் கூடத்தில் அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள் கூட்டம் தலைவர் கலைமாமணி சூலூர் கலைபித்தன் அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய பின்னர்,முதலில் பத்ம விபூசண் ரத்தன் டாடா வின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது.பிறகு தொடர்ந்து.,
செயலாளர் அகவைமுதிர்ந்த தமிழறிஞர் பெருங்கவிஞர் இளம்விழியன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.


தொடர்ந்து இந்த ஆண்டு தேர்வுபெற்ற அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் கவிஞர் முகில் தினகரன்,கவிஞர் துரைசாமி , ஆகியோருக்குப் பொன்னாடைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஏகமனதான கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டு தமிழக அரசிற்கு அனுப்பிவைக்க தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்தில் செயல் தலைவராக கலைமாமணி மு.பெ.இராமலிங்கம்,
இணைச் செயலாளர்களாகத் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர்பாட்சா, கவிஞர் கு.கணேசன் ஆகியோர் தேர்வுபெற்றனர்.
நலிவடைந்த அகவைமுதிர்ந்த தமிழறிஞர் தேவராஜ் அவர்களுக்குக் கூட்டத்தில் அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள் சார்பில் நிதி வழங்கி, சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாகக் கூட்டத்திற்கு வருகைபுரிந்த அகவைமுதிர்ந்த தமிழறிஞர்கள் தங்களை அறிமுகப்படுத்தி பேசினார்கள்.
கூட்டத்தில் திருக்குறள் செம்மல் திருக்குறள் தூதர் முனைவர் மு.க. அன்வர்பாட்சா அவர்கள் அரசிற்கு அனுப்பும் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் அனைவரும் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.
கூட்டத்தின் நிறைவாக முனைவர் கோவை கிருஷ்ணா அவர்கள் நன்றி கூறினார்.
விழா இனிதே நிறைவு பெற்றது...
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments