Ticker

6/recent/ticker-posts

Ad Code



விமானங்களில் pager, walkie-talkie கருவிகளுக்கு ஈரான் தடை


ஈரான் அனைத்து விமானச் சேவைகளிலும் பேஜர் (pager), walkie-talkie தொலைத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் லெபனானில் அத்தகைய கருவிகள் திடீரென வெடித்தன.

அதில் சுமார் 3,000 பேர் காயமுற்றனர்.

அதன் பின்னணியில் இஸ்ரேலுக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கைத்தொலைபேசி தவிர வேறு எந்தத் தொலைத் தொடர்புக் கருவிகளுக்கும் விமானத்தில் அனுமதி இல்லை என்று ஈரான் கூறியுள்ளது.

ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி ISNA செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் Emirates ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது விமானங்களில் பேஜர், walkie-talkie தொலைத் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது.

seithi



 



Post a Comment

0 Comments