Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரஷியாவில் வட கொரிய படையினர்

வட கொரிய போர் வீரர்கள் ரஷிய போருக்கு உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  உக்ரைன் மற்றும் தென் கொரிய ராணுவ உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி ஊடகம் தெரிவித்து தகவலில், :

உக்ரைன் போரில் வட கொரிய ராணுவப் பொறியாளர்கள் ரஷியாவுக்கு உதவி செய்து வருகின்றனர். உக்ரைன் எல்லைக்குள் இருக்கும் ஏராளமான போர் முனைகளில் ஏராளமான வட கொரிய பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் போரில் வட கொரியாவின் கேஎன்23 ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்திவருகிறது. அந்த ஏவுகணைகளை செலுத்துவதற்கான சாதனங்களை வட கொரிய பொறியாளர்கள் பராமரித்துவருகின்றன என பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் போர் களத்தில் வட கொரிய ராணுவ பொறியாளர்களும் செயல்பட்டுவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

nambikkai



 



Post a Comment

0 Comments