Ticker

6/recent/ticker-posts

Ad Code



100,000 துண்டுகளாக வெட்டிய நோட்டுகளை ஒட்டிக்கொடுத்த வங்கி - 4 பிள்ளைகளை வளர்ப்பதற்கு


சீனாவில் மன அழுத்தத்திற்கு ஆளான பெண் ஒருவர் 100,000 துண்டுகளாக வெட்டிப்போட்ட பண நோட்டுகளை வங்கியொன்று மீண்டும் ஒட்டிக் கொடுத்திருக்கிறது.

South China Morning Post அந்தத் தகவலை வெளியிட்டது.

ஸாங் (Zhang) எனும் பெண் வெட்டப்பட்ட நோட்டுகளோடு பல வங்கிகளை நாடிச்சென்றார்.

அவரது அண்ணி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அந்தப் பண நோட்டுகளை வெட்டிப்போட்டதாக அவர் சொன்னார்.

அண்ணி இறந்த பிறகு அவருடைய 4 பிள்ளைகளை வளர்க்கச் சிரமப்பட்ட ஸாங், கிழிந்த பண நோட்டுகளை ஒட்டித் தர முடியுமா என்று வங்கிகளிடம் உதவி கேட்டார்.

வேலை அதிகம் என்று எல்லா வங்கிகளும் மறுத்துவிட்டன.

குன்மிங் (Kunming) நகரில் உள்ள வங்கி மட்டும் ஸாங்கிற்கு உதவ முன்வந்தது.

வெட்டப்பட்ட பண நோட்டுகளில் சில விரல் நக அளவே இருந்தன. எனவே ஒட்ட வைக்க வங்கி ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பலமுறை முயற்சி செய்தனர். அவற்றின் வடிவத்தைப் பொறுத்து எதனை, எங்கு, எப்படி ஒட்டுவது என்பதைத் தீர்மானிக்கப் பல நாள்கள் ஆயின.

ஒட்டும் வேலையை ஒட்டுமொத்தமாய் முடிக்க 22 நாள்கள் பிடித்தன.

அவர்கள் ஒட்ட வைத்த பணத்தின் மதிப்பு 32,600 யுவான் அதாவது 6,043 வெள்ளி.

அவற்றை மாற்றிப் புதிய நோட்டுகளாக வங்கி ஸாங்கிடம் ஒப்படைத்தது.

ஸாங் ஒரு பட்டுத்துணியில் நன்றி சொல்லும் வாசகத்தை எழுதி ஊழியர்களுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

seithi



 



Post a Comment

0 Comments