வைகை எக்ஸ்பிரஸில் படிக்கட்டில் பயணம்... கடலூர் இளைஞரை தரதரவென இழுத்து சென்ற இரயில்... நடந்தது என்ன ?

வைகை எக்ஸ்பிரஸில் படிக்கட்டில் பயணம்... கடலூர் இளைஞரை தரதரவென இழுத்து சென்ற இரயில்... நடந்தது என்ன ?

சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி தினமும் இயக்கப்படும் இரயில்களில் முக்கியமானது வைகை எக்ஸ்பிரஸ். தெற்கு இரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த இரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த இரயில் நேற்று (அக்.02) மதியம் வழக்கம்போல் தனது சேவையை தொடங்கிய நிலையில், இதில் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர் பயணித்துள்ளார். அப்போது இவர் இரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எழும்பூரில் இருந்து கிளம்பிய இரயில், சென்னை, சைதாப்பேட்டை இரயில் நிலையத்தை தாண்டியபோது, அந்த இளைஞரின் கால், இரயில் நிலையத்தின் நடைமேடையில் சிக்கியுள்ளது.
இதனால் இரயிலில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட அவர், நெடுந்தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து இழுத்துச் செல்லப்பட்ட அவரது தலை மீண்டும் இரயில் பெட்டியின் மேல் இடித்து சுற்றி உருண்டுக் கொண்டே, இரயிலுக்குள் விழுந்து உயிரிழந்தார். இளைஞரை அந்த இரயில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாம்பலம் இரயில்வே போலீசார், உயிரிழந்த இளைஞர் பாலமுருகனின் உடலை மீட்டு உடற்கூறாவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post