
தகவலறிந்த ஆதாரங்களின்படி, இதுவரை 2000 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ் தாக்கம் தற்போது அநேகமான பகுதிகளுக்கு பறவியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அடையாளம் தெரியாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டு நாட்களில் பன்றிகளை கொன்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.
நிலைமை குறித்து கருத்து தெரிவித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத்,
“இந்த நோய் பல பகுதிகளில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகளை தாக்கிய இந்நோய் தற்போது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கும் பரவியுள்ளது.
எனவே, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நோய்வாய்ப்பட்ட பன்றிகளின் இறைச்சியை உட்கொள்வதால் இந்த நோய் மனிதர்களை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை பண்ணைகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
வைரஸ் தொற்று
இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பன்றிகள் சுமார் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும் அது வேகமாக பரவி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த பிரிவில் உள்ள சுமார் 20 பண்ணைகளில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பண்ணையில் மாத்திரம் 200 க்கும் மேற்பட்ட பன்றிகளை இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.
இந்நிலையில் குறித்த தொற்றுக்கான தீர்வுகளை வழங்க கால்நடை வைத்தியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பண்ணை விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பன்றிகள் அதிக அளவில் உயிரிழப்பதால், சில பண்ணைகளில் பாரிய இழப்பீடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)


0 Comments