Ticker

6/recent/ticker-posts

அப்பா மேல இப்படி ஒரு பாசமா? சர்பராஸ் கானின் ஜெர்சி நம்பருக்கு பின்னால் உள்ள – சுவாரசிய பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சர்ஃபராஸ் கான் அற்புதமாக பயன்படுத்தி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சர்பராஸ் கான் ரன்கள் எதுவும் அடிக்காமல் டக் அவுட்டானார்.

அதனைத்தொடர்ந்து இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 150 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி சற்று நல்ல நிலையில் உள்ளது.

இந்நிலையில் சர்பராஸ் கானின் ஜெர்சி நம்பரான 97 என்கிற எண்ணிற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான பின்னணி ஒன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவரது தம்பி முஷீர் கானும் அதே 97-ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து கொண்டுதான் உள்ளூர் தொடர்களில் களம் இறங்கி வருகிறார்.

இப்படி இருவருமே அந்த 97 ஜெர்சி நம்பரை பயன்படுத்த காரணம் யாதெனில் : ஹிந்தியில் 9 என்கிற எண்ணை “நவ்” என்று உச்சரிப்பார்கள். அதேபோன்று 7 என்கிற நம்பருக்கு ஹிந்தியில் “சாத்” என்று உச்சரிப்பார்கள். இதில் சுவாரசியமான பின்னணி யாதெனில் சர்பராஸ் கானின் தந்தை பெயர் “நவ்ஷாத்” கான். எனவே அவரது பெயரை இந்த இரண்டு எண்களும் கூறுவதால் அந்த நம்பரை ஜெர்சியில் பொறித்துள்ளார்.

தனது சிறு வயது முதலே பயிற்சியாளராக இருந்து தன்னையும் தனது சகோதரரையும் தற்போது இந்திய அணிக்காக விளையாட வைக்கும் அளவிற்கு முன்னேற்றியுள்ள அவரது தந்தையின் அர்ப்பணிப்பை போற்றும் விதமாகவே இந்த நம்பரை சர்பராஸ் கான் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments