இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல்!:தடுமாறும் இஸ்ரேலிய பயங்கரவாதிகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல்!:தடுமாறும் இஸ்ரேலிய பயங்கரவாதிகள்


ஹைஃபா மற்றும் க்ரேயோட் உள்ளிட்ட அதன் சுற்றுப்புறங்களில் சைரன்கள் ஒலிக்கின்றன, ஹைஃபாவில் பல வெடிப்புகள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகளால் ஏவப்பட்ட 140க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகல் இஸ்ரேலின் வடக்கு கலிலி பகுதி (லெபனான் எல்லைக்கு அருகில்) ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் ஏவப்பட்ட மிகப்பெரிய நடுத்தர தூர சால்வோஸ் ஏவுகணைகளில்  இதுவும் ஒன்று என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.  

ஹைஃபா, சஃபாத் மற்றும் சஃபாத்தின் தென்கிழக்கே ரோஷ் பினா குடியேற்றத்தின் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.. 

ஹிஸ்புல்லாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து சஃபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன.

லெபனானில் இருந்து ஹைஃபா மற்றும் அதன் சுற்றுப்புறங்களை நோக்கி குறைந்தது 12 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களிடையே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் அதன் டஜன் கணக்கான வீரர்கள் காயமடைந்ததாக ஒப்புக்கொண்டது, அவர்களில் பெரும்பாலோர் லெபனான் எல்லைக்கு அருகில் இருப்பவர்கள் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 

லெபனானில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டதைத் தொடர்ந்து சஃபாத், அமியாட் மற்றும் ரோஷ் பின்னாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 15 தீயணைப்பு குழுக்கள் மும்முரமாக ஈடுபட்டதாக ஹீப்ரு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆளில்லா விமானம் ஊடுருவிவிடுமோ என்ற அச்சத்தில் ஹைஃபாவில் சைரன்களும் ஒலித்தன. இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் ஒருமுறை தாண்டி ஹைஃபா மற்றும் க்ராயோட் மீது ஆளில்லா விமானம் பறந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரோன் ஒரு பகுதியைத் தாக்கியதைக் காட்சிகள் காட்டியது, அதன் இடம் எது என்று இன்னும் குறிப்பிடப்படவில்லை.
காசா மக்களுக்காகவும்,லெபனானைப் பாதுகாப்பதற்காகவும்  இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக எங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹிஸ்புல்லா போராளி இயக்கம் தெரிவித்தது. 

இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் Haret Hreik, Burj al-Barajneh மற்றும் Choueifat ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து அவற்றை தரைமட்டமாக்கின.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான அல்-டாஹிஹ் என்றும் அழைக்கப்படும் ஹரேட் ஹ்ரீக்கில் உள்ள அல்-ஹசானியன் மசூதியைச் சுற்றி இஸ்ரேலிய விமானப்படையால் பெரிய அளவிலான அழிவுகள் ஏற்பட்டதை காட்சிகள் காட்டுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை, லெபனானின் தெற்கில் ஒரு வாகனத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக லெபனான் இராணுவம் அறிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட Kfar Chouba மற்றும் Shebaa மலைகளில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை ஹிஸ்புல்லாவும் குறிவைத்து வருகின்றனர்.  

இஸ்ரேலிய இராணுவத்துக்கும்,ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு இடையே தினசரி மோதல்கள் அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெர்விக்கின்றன.

நீண்ட காலப் போருக்காகப் மிகப்பெரிய படைகளை ஹெஸ்புல்லா வைத்திருக்கும் அதே வேளையில், நூற்றுக்கணக்கான போராளிகளுடன் மட்டுமே இஸ்ரேலுக்கு எதிராக ஹெஸ்புல்லா எல்லையில் போரிட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான போராளிகள் நீண்ட காலப் போருக்கு தாயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாஸ்டர்



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post