Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலா ஹாரிஸ் கொடுத்த முக்கிய வாக்குறுதி!

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் இருக்கின்றனர்.

இவர்களில் யாருக்கு மக்களின் ஆதரவு என அங்கு நடந்துவரும் கருத்துக்கணிப்புகளில் சில சமயம், கமலா ஹாரிஸும், டிரம்பும் மாறி மாறி முன்னிலை வகித்துவருகின்றனர். தேர்தலில் மக்களை கவர முக்கிய பிரச்சனைகளை எடுத்து பேசுவது, வாக்குறுதிகள் வழங்குவது என்றும், ஒருவரை மாறி ஒருவர் விமர்சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், நடுத்தர மக்களின் வாக்குகளை கவரும் வகையில் வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் பேசிய அவர், பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த டிரம்ப்பால், நடுத்தர மக்களின் பிரச்னைகளை புரிந்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவில் நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் விலைவாசிகளை குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
 
இதே போன்று அரிசோனா மாகாணத்தில் பரப்புரை மேற்கொண்ட டிரம்ப், கமலா ஹாரிஸ் போன்று அமெரிக்கர்களுக்கு துரோகம் செய்த தலைவரே இல்லை என்று குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், அமெரிக்காவை உலக நாடுகள் குப்பைத் தொட்டி போன்று பயன்படுத்துவதற்கு பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வழிவகை செய்திருப்பதாக விமர்சித்தார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments