பேஜர், வாக்கி-டாக்கி சாதனங்களுக்குத் தடை விதித்த Emirates

பேஜர், வாக்கி-டாக்கி சாதனங்களுக்குத் தடை விதித்த Emirates

எமிரேட்ஸ் (Emirates) விமான நிறுவனம் பேஜர் (pager) சாதனங்கள், வாக்கி-டாக்கி (walkie-talkie) தொலைத்தொடர்புக் கருவிகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்துள்ளது.

லெபனானில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் நடவடிக்கை வந்துள்ளது.

பயணிகள் விமானத்தில் செல்லும்போது அந்தச் சாதனங்களை வைத்திருக்க அனுமதி இல்லை.

"துபாய்க்குச் செல்லும், அங்கிருந்து வரும், அல்லது துபாய் வழி பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளும் பேஜர் சாதனங்களையும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புக் கருவிகளையும் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது" என்று நிறுவனம் குறிப்பிட்டது.

அந்தச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர் சாதனங்களும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புக் கருவிகளும் வெடித்துச் சிதறின.

அதில் குறைந்தது 37 பேர் மாண்டனர். கிட்டத்தட்ட 3,000 பேர் காயமுற்றனர்.

seithi



 



Post a Comment

Previous Post Next Post