Ticker

6/recent/ticker-posts

இல்லப் பணிப்பெண்களுக்கு Iphone 16ஐப் பரிசளித்த முதலாளி


இல்லப் பணிப்பெண்களுக்கு Iphone 16 கைத்தொலைபேசிகளைப் பரிசளித்த முதலாளிகளை இணையவாசிகளின் பாராட்டியுள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த ஜெஃப் லியோங்(Jeff Leong) இந்திரா களஞ்சியம் (Inthira Kalanjiam) இருவரும் பணிப்பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காணொளி YouTubeஇல் பதிவேற்றப்பட்டது.

தம்பதியின் பிள்ளைகளைக் கொஞ்சும் பணிப்பெண்கள் பரிசைக் கண்டு கண்ணீர் சிந்துவதை அதில் காணமுடிகிறது.

ஆண்டுதோறும் புதிய கைத்தொலைபேசி வாங்கும் பழக்கம் தம்பதிக்கு உண்டு...

"கைத்தொலைபேசியை ஓவ்வோர் ஆண்டும் மாற்றுவதற்கு என்ன அவசியம்?" என்று பணிப்பெண்கள் கேட்பதுண்டு.

புதிய கைத்தொலைபேசி பெறுவதில் கிடைக்கும் இன்பத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணியதாகத் தம்பதி கூறினர்.

இணையவாசிகள் பலர் தம்பதியை மெச்சினர்.

பணிப்பெண்களின் மகிழ்ச்சியைக் கண்டு தாங்களும் மகிழ்வதாக அவர்கள் கூறினர்.

சிலரோ பணிப்பெண்கள் மகிழ்ச்சியடைய iPhone தேவையில்லை...அவ்வப்போது அவர்களுக்கு நன்றி தெரிவித்தாலே போதும் என்று கூறினர்.

seithi



 



Post a Comment

0 Comments