Ticker

6/recent/ticker-posts

கனடாவில் தாக்கப்பட்ட இந்துக்கோயில் விவகாரம்: இந்திய பிரதமரின் கடும் கண்டனம்

கனடாவில் உள்ள இந்து கோயில் ஒன்றின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து இந்திய பிரதமர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் அந்த கோயிலுக்குள் இருந்த போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறித்து பிரதமர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது.

கனடாவில் குடியுரிமைப் பெற்ற காலிஸ்தான் உறுப்பினர் ஹர்தீப்சிங் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியதே இந்த முறுகலுக்கான காரணமாகும்.

எனினும், இந்திய மத்திய அரசு இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தநிலையில், இரண்டு தரப்பும், இராஜதந்திரிகளை திருப்பியனுப்பும் நடவடிக்கைகளையும் அண்மையில் முன்னெடுத்தன.

இந்தச் சூழலில் கடந்த வாரம், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள கோயிலில் இந்திய உயர்ஸ்தானிகரகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இதன்போது, அந்த கோயில் நுழைவாயில் அடையாளம் காலிஸ்தானிய ஆதரவாளர்களால் தேசப்படுத்தப்பட்டது.

இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, கனடாவில் இந்துக் கோயில்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

tamilwin



 Ai SONGS

 



Post a Comment

0 Comments