Ticker

6/recent/ticker-posts

உலக அமைதிக்காக ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார்..?


காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கொடூரமான போருக்கு தங்களின் அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்ததை அடுத்துஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் அவமானகரமான தோல்வியை சந்தித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் கமலா ஹாரிஸை எதிர்த்து வெற்றி பெற்றார். 

2020 தேர்தலை கவிழ்த்து தன்னை அதிகாரத்தில் வைத்திருக்க முயற்சித்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டிரம்ப் ஒரு வரலாற்று மறுபிரவேசம் செய்துள்ளார். 

ஜனவரி 6, 2021 நடந்த தேர்தலில் முரைகேடுகள் நடந்ததாக பைடன் மீது புகார்கள் குவிந்தன.முறையான விசாரணைகள் முன்னெடுக்காத பட்சத்தில்  டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் மீது  நடத்திய  தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்ரம்ப்  மீது பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

2024 தேர்தலில் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் ட்ரம்ப் மீதுபலகுற்றச்சாட்டுக்களை பைடன் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது  ட்ரம்ப்பை  கொலை செய்ய இரண்டு முறை முயற்சிகள் மேட்கொல்ப்பட்டும் தோல்வியில் முடிந்தன.
பைடன் கைக்கூலிகளால் நடாத்தப்பட்ட அந்த   சம்பவத்திற்கு ஈரான் மீது பழியைப் போட்டார்கள்.

மேலும் ஊழல் வழக்குகள் ,பெண்களுடனான தொடர்பு,விபச்சாரம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர்மீது சுமத்தி அமேரிக்கா மக்களின் மனதில் விஷத்தை விதைக்க பைடன் முயற்சித்தும் ட்ரம்ப்பின் வெற்றியை தடுக்க முடியவில்லை.


வயது முதிர்ச்சியும் உடல் நிலை காரணமாகவும்  இந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து பைடன் ஒதுங்கி ,உப ஜனாதிபதியாக இருந்த கமலா ஹரீஸ் போட்டியிட்டார்.எனினும் பைடன் ,கமலா ஹரீஸ் இருவருடைய கொள்கையும் ஒன்றாகவே இருந்தது.அதில் முக்கியமாக இஸ்ரேல் ஆதரவுக் கொள்கைக்கு கமலா ஹரீஸ் மேலும் வலுச் சேர்க்கும் வகையில் "இஸ்ரேல் தங்களை பாது காக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எங்கள் முழுமையான ஆதரவு இருக்கும்"என்று தேர்தல் மேடைகளில் முழங்கினார்.

டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் பாலஸ்தீன் விடயத்தில் தன்னைக் கொஞ்சம் அடக்கி வாசித்ததைக் கானக் கூடியதாய் இருந்தது.

"நான் வெற்றிபெற்றால் ,இஸ்ரேல்,பாலஸ்தீன் போரையும் ,உக்ரைன் ,ரஷ்யா போரையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக "தேர்தல் பிரசாரங்களில் பேசியதைக் காணக் கூடியதாய் இருந்தது.

கமலா ஹாரீஸின் போர் வெறிப் பிரசாரமும் , ட்ரம்ப்பின் அமைதிக்கான பிரசாரமும் அமெரிக்க மக்களை சிந்திகக வைத்து ஜனாதிபதியை தேர்ந்தேடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

கமலா ஹரீசின் சிறுபிள்ளைத்தனமான அரசியலில் ,ட்ரம்ப்பின்மீது சுமத்தப்பட்ட அணைத்து குற்றச் சாட்டுகளையும் மக்கள் மறந்து உலகில் அமைதியை நிலை நாட்டும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்புக்கு ஆதரவாக தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பொதுவாக அமெரிக்காவில் ஜனாதிபதியாக வரும் அத்தனை பேரும் "உலகில் அமைதியை நிலை நாட்டுவதாக" மக்களுக்கு உறுதி அளித்துவிட்டுத்தான் வருகின்றார்கள்.இந்த வார்த்தைகள் பலமுறை அமேரிக்கா ஜனாதிபதிகளின் வாயிலிருந்து வந்துள்ளதை காலம் காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு அமேரிக்கா ஜனாதிபதியும் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து விட்டுத்தான் ஓய்வு பெறுகின்றார்கள்.

ட்ரம்ப்பின் கடந்தகால அரசியலிலும் முஸ்லிகளுக்கு எதிரான சில கசப்பான நிகழ்வுகளும் நடந்துள்ளன.அதில் முக்கியமாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு உலக முஸ்லிகளிடையே மிக மோசமான ஒரு நிலைப்பாட்டுக்கு வழிவகுத்தது. 

எனினும் கடந்த (2017 to 2021)தேர்தல் பிரசாரங்களைப் பார்க்கும்போது இம்முறை(2024)சற்று வித்தியாசமாயிருந்தது.

2020 ன் கணக்கெடுப்பின்படி இஸ்லாம் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய மதமாக (1.34%),இருக்கின்றது.அதிகமான முஸ்லிம்கள் ட்ரம்ப்புக்கு வாக்களித்துள்ளார்கள். 

முஸ்லிகள் மட்டுமில்லாமல் அனைத்து இன மக்களும் புதிய ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பது "உலக அமைதி"ஒன்றே.

எதிர்வரும் காலங்களில் ட்ரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றது. 

மாஸ்டர்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments