Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்த உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?


புற்றுநோய் என்பது முன்பெல்லாம் சிலருக்கே இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் குடும்பத்தில் ஒருவருக்காவது இருக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. மது, சிகரட் குடிப்பது, மரபணு மாற்றம், ரேடியேஷன் போன்றவை புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருந்தாலும், நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள நச்சுக்களும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. அதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Processed foods: உணவுப் பொருட்கள் நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்கவும், அதனுடைய நிறம், சுவை, மணம் ஆகியவற்றை தக்கவைக்கவும் அதன் வடிவத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிக்கக்கூடிய உணவுகள்தான் Processed foods ஆகும். உதாரணத்திற்கு பிஸ்கட், சிப்ஸ், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், ஜாம் போன்ற உணவுகள் பல மணி நேரம் ப்ராஸஸ் செய்யப்படுவது மட்டுமில்லாமல். Preservatives, colouring agent, trans fat ஆகியவை சேர்க்கப்படுகிறது. இவை உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களான Cancer carcinogen ஐ அதிகரிக்கும். எனவே, தினசரி உணவில் அதிகமாக Processed foodsஐ எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

2. White sugar and Maida: வெள்ளை சர்க்கரை மற்றும் மைதா மாவில் ஏராளமான Bleaching agent, Preservatives போன்ற ரசாயனம் நிறைந்திருக்கிறது. இது உடலில் கொழுப்பை அதிகரித்து கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

3. Smoked foods: தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்கும் சுட்ட உணவுகளான Barbequeவில் மீன், இறைச்சி, சிக்கன் போன்ற அசைவ உணவுகளை தீயில் அதிக வெப்பத்தில் சுடுவதால், இது ஒருவகை ரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. இது உடலில் கேன்சர் நோயை உருவாக்கும் அபாயம் உள்ளது. இதனால் இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

4.Soda and sugary drinks: ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பிறகு சோடா அல்லது குளிர்பானம் குடிக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். இதில் நிறைய Sugar, Preservatives, Artificial colours சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிகப்படியான இனிப்பு உடலில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்துவது மட்டுமில்லாமல், உடலில் Chronic inflammationஐ உண்டாக்கும். இதைத் தொடர்ந்து அருந்தி வந்தால், பதிமூன்று வகையான கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது.

5. Artificial colours and flavours: குழந்தைகள் சாப்பிடக்கூடிய மிட்டாயில் தொடங்கி, பேக்கரி, தந்தூரி சிக்கன், கேசரி, பஞ்சுமிட்டாய் என அனைத்திலும் Artificial colour மற்றும் பிளேவரை சேர்க்கிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிடத் தூண்டுவதாகவும் இருக்கும். இதை அதிகமாக சாப்பிடும்போது உடலில் உள்ள DNAவை சேதப்படுத்தி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இதனுடைய பாதிப்பை உணர்ந்து பல நாடுகள் Red 40, Yellow 5, Yellow 6 ஆகியவற்றை தடை செய்து உள்ளனர். எனவே, இதுபோன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

kalkionline





 



Post a Comment

0 Comments