
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் முதலில் விளையாடிய 5 போட்டிகளைஜ் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான இரண்டாவது போட்டி ஏப்ரல் இரண்டாம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்றது.
இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 292-8 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ரைஸ் மரியூ 18, நிக் கேலி 31, ஹென்றி நிகோலஸ் 22, டேரில் மிட்சேல் 18, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 18 என டாப் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்தனர்.
அதனால் 132-5 என நியூசிலாந்து தடுமாறிய போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய முகமது அப்பாஸ் 44 ரன்கள் எடுத்தார். அவருடன் அபாரமாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் மிட்சேல் ஹே 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் 99* (78) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் செய்தார். குறிப்பாக கடைசி 4 பந்துகளில் 6, 6, 4, 4 என அடுத்தடுத்த பௌண்டரிகள் எடுத்தும் அவரால் 100 ரன்களை தொட முடியவில்லை.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments