அமெரிக்காவில் டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது!

அமெரிக்காவில் டிரம்பின் வெற்றி உறுதியாகி விட்டது!


அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிகழ்ந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

இதுவரை வெளியான முடிவுகளில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அத்துடன், செனட் சபையில் பெரும்பான்மை இடங்களை குடியரசு கட்சியே கைப்பற்றியுள்ளது.

தற்போதைய துணை ஜனாதிபதியும்,  ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

வடக்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய இரண்டு முடிவை தீர்மானிக்கும் மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் உற்சாகம் இழந்துவிட்டனர்.

ஹார்வர்ட் பல்கலைக் கழக வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் குழுமியிருந்த கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், இன்றிரவு நடக்கவிருந்த கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், கமலா ஹாரிஸ் உரை நிகழ்த்தப் போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமுள்ள 538 தெரிவாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரே வெற்றி பெற்றவராவார். எனவே டிரம்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்டது!

எலக்ட்டோரல் வாக்குகளில் டொனால்ட் டிரம்ப் 267; கமலா ஹாரிஸ் 224 பெற்றுள்ளனர். கமலா ஹாரிஸை விட முன்னிலை வகிக்கிறார். இன்னும் 3 வாக்குகள் எடுத்தால், ட்ரம்பின் வெற்றி உறுதியாகிவிடும்!

அமெரிக்கா நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேரடியாக வாக்களித்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில்லை. 
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டில் பிறந்த 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்கள், 14 ஆண்டுகள் அமெரிக்காவின் குடிமகனாக இருப்பவர்கள் போட்டியிட முடியும்.

அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக இரு கட்சிகளும் மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகிற மாகாண அளவில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர் தெரிவு (Primaries), அரசியல் கட்சிகள் விவாதங்கள் உள்ளிட்டவைகள் மூலம் வேட்பாளரை தெரிவு (Caucuses)  ஆகிய நடைமுறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்குள்ளும் பல்வேறு நடைமுறைகள் பலவும் உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கப் போகின்றார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்கா வரலாற்றில் இதற்கு முன்னர் இப்படியான வெற்றி கிடைத்ததில்லை; இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும் எனவும், அமெரிக்காவில் மீண்டும் பொற்காலத்தை உருவாக்குவேன் எனவும் ஆதரவாளர்களிடையே பேசும்போது  குறிப்பிட்டுள்ள இவர், எதிர்வரும் 2025 ஜனவரியில் பதவியேற்பார்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post